தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

31. தடுக்காத ஊசி மருந்துகள்! - 2

வேக்ஸின்கள் உண்மையிலேயே வேலை செய்கின்றனவா? எந்த நோய்க்காக குறிப்பிட்ட வேன்ஸின் போடப்படுகிறதோ அந்த நோய் குழந்தைக்கு வராமல் அது தடுக்கிறதா? 

News image
Updated On :2 நவம்பர் 2016, 5:44 am

நாகூர் ரூமி

Story image

வேக்ஸின் விளைவுகள்

தடுப்பு மருந்துகளுக்குள் பல அசிங்கமான சமாசாரங்களும் ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன என்பதுவரை பார்த்தோம். அதைப்பற்றி விழிப்புணர்வு வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். மனசாட்சியுள்ள மருத்துவர்களும் மெள்ள மெள்ள கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். வேக்ஸின்கள் பற்றிய தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். 

வேக்ஸின்கள் உண்மையிலேயே வேலை செய்கின்றனவா? எந்த நோய்க்காக குறிப்பிட்ட வேன்ஸின் போடப்படுகிறதோ அந்த நோய் குழந்தைக்கு வராமல் அது தடுக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதில்கள் சமீபகால வரலாறு முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. கொஞ்சம் பார்க்கலாமா?

Story image

வேக்ஸின்கள்தான் மருந்துக் கம்பனிகளின் முதுகெலும்பு. குழந்தைகள் எல்லோரும் அக்கம்பனிகளுக்கு வாழ்நாள் கஸ்டமர்கள் ஆகிவிட்டனர் என்கிறார் டாக்டர் ஷெர்ரி டென்பென்னி. இவர் அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் பணிபுரிபவர். வேக்ஸின்களால் குழந்தைகளுக்கு ’ஆட்டிஸம்’ (autism) எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைவு நோய் ஏற்படுகிறது என்றும் இவர் கூறுகிறார். Saying No to Vaccines என்று ஒரு புத்தகமும் இவர் எழுதியிருக்கிறார். 

Story image

1853-ல் வேக்ஸின்கள் கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகுதான், மூன்று முறை கொள்ளைநோய்க்கு நாம் ஆளாகியிருக்கிறோம். 1857-ல் இருந்து 59-வரை பெரியம்மை வந்து 14,000 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 1853-ல் இருந்து 65-வரையிலும் கொள்ளைநோய் இறப்புகள் 20,000-மாக உயர்ந்தது. 1871-72-ம் ஆண்டுகளில் 44,800 பேர் இறந்துள்ளனர் என்கிறார் டாக்டர் வால்டர் ஆர். ஹாட்வென் MD MRCS MRCP. கிருமிகள் மூலமாக நோய்கள் பரவுகின்றன என்ற கருத்தை இவர் தீவிரமாக எதிர்ப்பவர். இங்கிலாந்தின் க்ளஸ்டர் மாகாணத்தில் பணிபுரியும் மருத்துவர் இவர்.

Story image

வேக்ஸின்கள் டைம் பாம் போன்றவை. அடுத்தது எப்போது நம் குழந்தைகளை ஊனமாக்கும் அல்லது கொல்லும் என்று தெரியாது என்கிறார் லாரி குக். அமெரிக்கரான இவர் www.stopmandatoryvaccines.com என்ற வலைத்தளத்தை உருவாக்கி, வேக்ஸின்களால் குழந்தைகள் எவ்விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். 

Story image

ஏற்கெனவே பெரியம்மை வந்து செத்த ஒருவரின் சீழை ஊசி மூலம் ஒரு குழந்தைக்குச் செலுத்துவதால் அது குணமடையும் என்று நம்புவது முட்டாள்தனமானது என்று கொதிக்கிறார் டாக்டர் வில்லியம் ஹோவர்டு ஹே. இவர் நியூயார்க் நகர மருத்துவர்.

Story image

பெரியம்மைக்கு வேக்ஸினேஷன் கொடுப்பதால் ரத்தப் புற்றுநோய் வருகிறது. இதை நாம் அனுபவத்தில் கண்டுகொண்டோம் என்று அடித்துக்கூறுகிறார் போலந்து நாட்டு மருத்துவப் பேராசிரியரான ஜூலியன் அலெக்சாண்டரோவிக்ஸ். 

Story image

மெக்ஸிகோ, ஹைத்தி, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில், உலக சுகாதார நிறுவனத்தின் சிபாரிசின் பேரில் அங்கிருந்த குழந்தைகளுக்குப் புட்டாளம்மைக்கான வேக்ஸின்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதிக அளவில் குழந்தைகள் இறந்துபோனதால் அதை இப்போது நிறுத்திவிட்டார்கள் என்கிறார் டாக்டர் ஆலன் கான்ட்வெல் MD. இவர் நியூயார்க்கில் உள்ள தோலியல் மருத்துவர்.

Story image

ஆட்டிஸம், அலர்ஜி, ஆஸ்துமா, கேன்ஸர் இப்படி எல்லாமே தடுப்பு மருந்துகள், ஊசிகள் போடப்பட்ட குழந்தைகளுக்கு வருகிறது என்று அடித்துக்கூறுகிறார் தடுப்பூசி ஆராய்ச்சியாளரான டாக்டர் டெட் கோரன். யூட்யூபில் அவரது நேர்காணலும் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு வேன்ஸின்கள் கொடுப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன என்று அவர் அதில் விளக்குகிறார்.

Story image

“தடுப்பூசிகளின் காரணத்தால் உலகில் ஒருநாள் ரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, முறையான ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21-ம் நூற்றாண்டு வரை கொண்டுசென்றுவிட்டோம் என்று புலம்புவார்கள்” என்று அங்கலாய்க்கிறார் டாக்டர் டெட் கோரன்.

வேக்ஸின்களின் விளைவாக குழந்தைகளுக்கு ஆட்டிஸம் எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது என்று சொன்ன இன்னொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் ஜெஃப்ரி ப்ராட்ஸ்ட்ரீட். அவர் 2015-ம் ஆண்டு இறந்துகிடந்தார். அது தற்கொலை என்று சொல்லப்பட்டது. ஆனால், வேக்ஸின் விற்கும் மருந்துக் கம்பனிக்காரர்களால் அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவர் குடும்பத்தினர் கூறினர். அவருடைய மகனே ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் 15 மாதக் குழந்தையாக இருந்தபோது கொடுக்கப்பட்ட வேக்ஸின்தான் அவரது மூளை வளர்ச்சிக் குறைவுக்குக் காரணம் என்று சொன்ன டாக்டர் ப்ராட்ஸ்ட்ரீட், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை சிபாரிசு செய்தார். 

Story image

ஒவ்வொரு வேக்ஸினும் தீமையே விளைவிக்கிறது (Every Vaccine Produces Harm) என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதினார் டாக்டர் ஆண்ட்ரூ மூல்டென் என்பவர்! 

Story image

“மனித வாழ்வின் விலைமதிப்பற்ற செல்வம் குழந்தைகள்தான். நாம் மிக அதிகக் கவனம் செலுத்தவேண்டியவர்களும் அவர்களே. தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுமுன் நன்கு ஆராய்ந்து செயல்படுங்கள்” என்று கனடாவின் VRAN (Vaccination Risk Awareness Network) அமைப்பு உலக மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறது. தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களால் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது. இப்போது அது Vaccine Choice Canada என்ற பெயரில் இயங்கி வருகிறது. கனடாவில் வேக்ஸின் போடுவது கட்டாயமில்லை என்ற வாசகமும் அதன் வலைத்தளத்தில் உள்ளது. வேக்ஸின் போட்டதால் குழந்தைகள் என்னவிதமான கஷ்டங்களுக்கு உள்ளாயினர் என்ற கதைகளுக்குத் தனியாக இணைப்பு கொடுத்துள்ளது.

அதில் ஒரு கதை

டாக்டர் ரெபெக்கா என்ற ஒரு பெண் விஞ்ஞானி தன் 18 மாதப் பெண் குழந்தைக்கு ‘வாரிலெக்ஸ்’ என்ற சின்னம்மை தடுப்பு மருந்தைக் கொடுத்திருக்கிறார். உடனே குழந்தைக்கு anaphylaxis எனப்படும் கடுமையான ஒவ்வாமை வந்தது. எந்த உணவையும் குழந்தையின் உடலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எது கொடுத்தாலும் வயிற்றால் போனது, வாயில் சிவப்பு சிவப்பாக தடிமன்கள், புண்கள் ஏற்பட்டன. குழந்தையால் முன்புபோல இயல்பாக இருக்க முடியவில்லை. அதன் எதிர்வினைகள் குழந்தையை பின்னோக்கித் தள்ள ஆரம்பித்தன. ஓரிருமாதக் குழந்தைபோல ஆனது அது. பதினெட்டு மாதக் குழந்தைக்கான வளர்ச்சியும் முதிர்ச்சியும் எங்கே போனதென்று தெரியவில்லை. 

ரெபெக்கா அதிர்ச்சியில் உறைந்துபோனார். வேக்ஸின் கொடுத்தன் விளைவுதான் அது என்று அவருக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ‘என்னுடைய கல்வியே என்னைக் கற்பழித்துவிட்டது’ என்று அவர் கூறினார் (”Now I feel raped by my education”). குழந்தையை பழைய ஆரோக்கிய நிலைக்குக் கொண்டுவருவதே தன் வாழ்வின் லட்சியம் என்று அதற்காக உழைக்க ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகள்! ஐந்து ஆண்டுகளுக்கு வெளியில், கடையில் வாங்கிய எந்த உணவையும் கொடுக்கவில்லை. வீட்டிலேயே சமைத்த உணவுதான். அதுவும் இயற்கை உணவுகள்! ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது! 

வேக்ஸின்களின் வரலாறு

வேக்ஸின்களின் பின் விளைவுகள், பக்க விளைவுகள் பற்றியெல்லாம் கொஞ்சம் பார்த்தோம். அவற்றின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?

தடுப்பு மருந்துகளின் வரலாறு, அம்மை குத்துதலில் தொடங்குகிறது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதுபோல, எந்த நோயையும் அந்த நோயாலேயே குணமாக்க வேண்டும் என்ற கோட்பாடு அதற்கு அடிப்படையாக அமைந்தது. 1760-களில் இதைத் தொடங்கிவைத்தவர் எட்வர்ட் ஜென்னர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர். ‘நோய்த்தடுப்பியலின் தந்தை’ என்று இவர் அறியப்படுகிறார்.

Story image

பசுவம்மை (cowpox) என்ற நோயால் தாக்கப்பட்ட பால்காரப் பெண்களுக்கு பெரியம்மை வருவதில்லை என்பதை அவர் தெரிந்துகொண்டார். அப்பெண்களின் கைகளில் இருந்த கொப்புளங்களின் வழியாக வந்த சீழானது பெரியம்மை வராமல் அவர்களைக் காப்பாற்றியது என்று அவர் நினைத்தார். வீரியம் குறைவான பசுவம்மை வந்தவர்களை பெரியம்மை தாக்குவதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

பசுவம்மை வந்த பால்காரப் பெண்ணின் கைக்கொப்பளத்தைக் கீறி, அதிலிருந்து கொஞ்சம் சீழை எடுத்து ஆரோக்கியமாக இருந்த தன் தோட்டக்காரனின் எட்டு வயது மகனின் உடலில் தேய்த்தார். ஆறு வாரங்கள் கழித்து அவனுக்கு பெரியம்மைக்கான வேக்ஸின் கொடுத்தார். அதாவது, பெரியம்மை நோய்க்கிருமியைக் கொஞ்சம் அவனுடைய உடலுக்குள் அனுப்பினார். அவனுக்கு பெரியம்மை வரவில்லை. ஏற்கெனவே கொஞ்சமாக உள்ளே அனுப்பிய பசுவம்மை சீழ் வேலை செய்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார். 

வேக்ஸினேஷன் என்ற பெயரைக் கொடுத்தவரே ஜென்னர்தான். Vacceinus என்ற பசுவைக் குறிக்கும் லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதுதான் ‘வேக்ஸினேஷன்’. பசுவம்மை, பெரியம்மையைத் தடுத்தது அவரை அப்படி ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கலாம். கோமாதா நமக்கு எப்போதுமே பாதுகாப்பாகத்தான் இருந்துள்ளது!

ஜென்னர் உலகப் புகழ் பெற்றார். அரசர்களின் நண்பரானார். அரசாங்கத்திடமிருந்து நிறைய பணமும் வந்தது. தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்த ஜென்னர், தன் பத்து மாத மகன் எட்வர்டின் கையைக் கீறி பசுவம்மை சீழை அதில் தடவினார். எட்டுநாள் கழித்து மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆனாலும் அவன் மீண்டும் நலமாகிவிட்டான். 

இரண்டு ஆண்டுகள் கழித்து அவனுக்கு பெரியம்மை தடுப்பூசியைப் போட்டார். இந்த முறை மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டான். ஆனால், அடுத்த ஆண்டு மீண்டும் ஒருமுறை அவர் தன் மகனுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டார். இதனால் அவன் மூளை பாதிப்புக்கு உள்ளாகி 21 வயதில் இறந்துபோனான். கசப்பான அந்த அனுபவங்களினால் தன் இரண்டாவது மகனுக்கு அம்மைத்தடுப்பூசியை அவர் போடவில்லை. பாவம், புகழுக்காக பரிசோதனை எலிகளைப்போல பெற்ற பிள்ளைகளைக் காவு கொடுத்துள்ளனர்!

அந்தக்கால ஐரோப்பாவில் அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே, அம்மை நோய்க்கான மருந்தாக இது அதிக அளவில் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் கொடுக்கப்பட்டது. “அக்காலத்து டாக்டர்கள் அனைவரும் இம்மருந்தைப் பையில் போட்டுக்கொண்டு பணம் சம்பாதிக்கத் துவங்கினார்கள்” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் ஹென்றி லிண்ட்லார்.

Story image

இம்மருந்துக்கு எதிராக மருத்துவர்களில் பலரும், விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினரும் உலகம் முழுவதும் இணைந்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து 1880-ம் ஆண்டில் உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. இதன் மாநாடு, 1880 டிசம்பரில் பாரீஸில் நடைபெற்றது. இதில் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் பத்து தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ஜெர்மனியில் ஏற்பட்ட தடுப்பூசி மருந்துகளின் பாதிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் மத்திய அமைச்சர் பிஸ்மார்க், 1888-ம் ஆண்டில் மாநில அரசுகளுக்குத் தடுப்பூசி பற்றிய சுற்றறிக்கையை அனுப்பினார். ‘‘சொரி, சிரங்கு, தோல் பாதிப்புகள் போன்ற புதிய நோய்கள் வருவதற்கு இந்த அம்மை மருந்து காரணமாகிவிட்டது. பசுவின் சீழிலிருந்து தயாரிக்கப்படும் இந்த அம்மை மருந்து நல்லதென்று பயன்படுத்தினோம். ஆனால் அம்மை நோயைவிட அந்த மருந்து கூடுதலான தீங்குகளைச் செய்துவிட்டது” என்று அந்த அறிக்கை சொன்னது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஜெர்மன் மாநில அரசுகள் கட்டாயத் தடுப்பூசி சட்டத்தைக் கைவிட்டன.

அமெரிக்காவில், அம்மைத் தடுப்பூசி போடப்பட்ட 98 சதவீத குழந்தைகளை அம்மை நோய் தாக்கியிருந்தது. இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு 30,000 ஆயிரம் பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அம்மைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் சொன்னது. 

1889-ம் ஆண்டில் இங்கிலாந்தில் அம்மை மருந்தின் விளைவுகளை ஆராய Royal Commission on Vaccination ஏற்படுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு ராயல் கமிஷன் தன் அறிக்கையை வெளியிட்டது. 1896-ல் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

அம்மை மருந்துகளின் விளைவுகள் மனிதர்களை மட்டுமல்லாமல் கால்நடைகளையும் விட்டுவைக்கவில்லை. ஸ்காட்லாண்டில் ஆடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டபோது இத்தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன. தடுப்பூசிகள் போடப்பட்ட ஆடுகளுக்குப் பால் வற்றிப்போனது. இப்பாதிப்பைக் கொண்டு அம்மை மருந்தின் விளைவுகளை ஆராய்ந்த டாக்டர். லிண்ட்லார் இவ்வாறு கூறுகிறார் - 

“அம்மை மருந்தால் உடலில் கொப்புளங்களும், சிரங்குகளும் முதலில் தோன்றுகின்றன. பின்பு ரசாயனப் பொருள் உடல் முழுவதும் பரவி பக்கவாதம், நரம்பு மண்டல பாதிப்பு, மூளைக்கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. இன்று அம்மை குத்தும் மருந்துகளை உற்பத்தி செய்வது வருமானம் தரக்கூடிய பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. இதன்மூலம் பல கம்பெனிகள் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய்களை லாபமாக ஈட்டுகின்றன. அம்மை மருந்தின் விளைவுகள் ஆடுகளிடமே இவ்வளவு கொடிய விளைவை ஏற்படுத்தினால், மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல? பத்தாயிரம் சிறுமிகள் பருவமடைவதற்கு முன்பே இரண்டு மூன்று முறை அம்மை மருந்து ஏற்றிக்கொண்டதால், பால் சுரப்பிகளின் வளர்ச்சி பாதிப்படைந்து, பிற்காலத்தில் குழந்தைப் பேற்றுக்குப் பின் அவர்களுக்குப் பாலே சுரக்கவில்லை”.

“1961-க்குப்பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் - போலியோ சொட்டு மருந்துதான்” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக்கொண்டார், போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்! முதலில் ஆயிரக்கணக்கான குரங்குகளுக்கு அந்த மருந்தைக் கொடுத்து அவர் சோதித்தார். கடைசியில் தனக்கும், தன் மனைவிக்கும், மகனுக்கும் கொடுத்தார். குரங்கிலிருந்து வந்தவன்தான் மனிதன் என்ற கோட்பாட்டை ஒப்புக்கொண்டார் போலும்! அவர் கொடுத்த மருந்தால், பதினோரு பேர் இறந்துபோனார்கள்!

Story image

“போலியோவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிகளுக்குப் பின்னரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதுமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று சொன்னார் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கிய ஆல்பர்ட் சாபின்! 

Story image

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள்காமாலை ஊசி போடுவது கட்டாயம் என்ற சட்டம், 1990-களில் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்தது. அங்கே தடுப்பூசி சட்டங்கள் மிகவும் கடுமையானவை. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி போட்டே ஆக வேண்டும். போடாதவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதிலும், பள்ளியில் சேர்ப்பதிலும்கூட பிரச்னைகள் தொடரும். 

வாய்மொழி உத்தரவுகள் மூலம் நம் நாடும் அமெரிக்காவையே பின்பற்றுகிறது என்பது துரதிருஷ்டமே. அரசின் எச்சரிக்கைகளை மீறி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து காப்பகங்களுக்கு அனுப்பவும், பெற்றோர்களைச் சிறைக்குள் தள்ளவும்கூட அமெரிக்க அரசு தயங்குவதில்லை. ஆஹா, government of the people, by the people and for the people என்று ஆப்ரஹாம் லிங்கன் அழகாக எடுத்துரைத்த ஜனநாயகமா இது! ஆனால், போனால் போகிறதென்று தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தொடுத்த வழக்குகளை விசாரிக்க அமெரிக்காவில் தனியாக தடுப்பூசி வழக்குகளுக்கான நீதிமன்றம் (U.S. Vaccine Court) செயல்படுகிறது அமெரிக்காவில், இது எப்படி இருக்கு!

அம்மைத் தடுப்பூசி போலவே மஞ்சள்காமாலைத் தடுப்பூசியும் பதிமூன்று விதமான புதிய நோய்களை ஏற்படுத்துவதாக 1997-ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் கண்டறிந்தனர். வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட மஞ்சள்காமாலைத் தடுப்பூசிகள் காரணமாக இருப்பதையும் கண்டறிந்த பிறகு, 1997-ல் அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை நீக்கியது.

கட்டாயச் சட்டத்தை நம்பி ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து குவித்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள், என்னடா செய்வது என்று கவலைகொண்டிருந்தபோது அவர்களின் ஆபத்பாந்தவனாக வந்தார் நம் பில்கேட்ஸ். ஆமாம். அமெரிக்க அரசு வேண்டாம் என்று ஒதுக்கிய மஞ்சள்காமாலை தடுப்பூசிகளை தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நம் நாட்டில் ஆந்திர மாநிலத்தின் நாலரை லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாகப் போடவைத்தவர் அவர்தான்! ஆஹா, இதுவல்லவா கர்மம், ஸாரி, தர்மம்! 

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்கூட தடுப்பூசி மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் அவை பெரிதுபடுத்தப்படுவதில்லை. காலப்போக்கில் மறக்கப்படுகின்றன. அப்படியானால், இந்தியாவில் என்ன நடந்தது என்று கொஞ்சம் பார்க்க வேண்டாமா? தடுப்பூசிகளின் உச்சபட்ச விளைவு என்னவென்றும் பார்க்க வேண்டாமா? 

வாருங்கள் அதையும் தெரிந்துகொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.