46. கேன்ஸர் பூதம்

கேன்ஸர் வந்தவர்கள் கெட்டவர்கள், சபிக்கப்பட்டவர்கள், இறைவனின் கோபத்துக்கு ஆளானவர்கள் என்றுகூட நம்புகிறார்கள்! கேன்ஸரைவிட மோசமான நம்பிக்கை இது!
கேன்ஸரால் இறப்பவர்களைவிட கேன்ஸரை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள்தான் அதிகம் - க்ரிஃபின்

கேன்ஸர் பூதம்

குழந்தைகளை பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவோமல்லவா, அதே வேலையை ‘கேன்ஸர்’ என்ற சொல்லைக்கொண்டு வளர்ந்தவர்களுக்குச் செய்துகொண்டிருக்கிறோம். ம்ஹும், ‘…கிறோம்’ அல்ல ‘…கிறார்கள்’! யார்? மருத்துவர்கள், மருந்துக் கம்பனிகள், மருத்துவமனைகள், அதை நம்பும் மனிதர்கள்!

ஆமாம். கேன்ஸர் என்றால் தீர்க்கமுடியாத ஒரு பெரிய வியாதி என்றுதான் நாம் நினைக்கிறோம். அப்படித்தான் நமக்குள் ஒரு தவறான கருத்து ஆழமான ஊன்றப்பட்டுள்ளது. என் சொந்தக்காரர் ஒருவர் இருக்கிறார். குடும்பத்தில், அக்கம்பக்கத்தில் யாருக்காவது கேன்ஸர் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டால், ‘அவருக்கு மேற்படி வியாதியாம்’ என்று சொல்வார்! கேன்ஸர் அல்லது புற்றுநோய் என்று சொன்னால்கூட அது தொற்றிக்கொள்ளுமோ என்று அவர் அஞ்சுகிறார்! அது புற்றும் இல்லை, தொற்றும் இல்லை என்று அவருக்கு யார் புரியவைப்பது?

கேன்ஸர் வந்தவர்கள் கெட்டவர்கள், சபிக்கப்பட்டவர்கள், இறைவனின் கோபத்துக்கு ஆளானவர்கள் என்றுகூட நம்புகிறார்கள்! கேன்ஸரைவிட மோசமான நம்பிக்கை இது! சமுதாயத்துக்காக தியாகம் செய்த பல பெரியவர்கள், ஞானிகள் பலருக்கு கேன்ஸர் வந்துள்ளது! அறிஞர் அண்ணா, ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றோருக்குக்கூட கேன்ஸர் இருந்துள்ளது. ஆனால், மனிதர்கள் ஏனோ இதுபற்றி அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில்லை. ஆனால், இந்த கேன்ஸர் பூதம் பற்றிய உண்மைதான் என்ன?

மேலே உள்ள க்ரிஃபின் மேற்கோளில் அந்த உண்மை மறைந்துள்ளது. யார் அந்த க்ரிஃபின்?

எட்வர்ட் க்ரிஃபின்

1931-ல் பிறந்த எட்வர்ட் க்ரிஃபின் ஒரு அமெரிக்க எழுத்தாளர், ஆவணப் படத் தயாரிப்பாளர். வித்தியாசமான சிந்தனைகளும் நம்பிக்கைகளும் கொண்டவர். உதாரணமாக, புனித பைபிளின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் இறைத்தூதர் நோவா(நூஹு)வின் கப்பல், துருக்கியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் வந்திறங்கியது என்று நம்பினார். அதுபற்றி The Discovery of Noah’s Ark என்று ஒரு நூலே எழுதினார்!

HIV-யால் AIDS வருவதில்லை என்றும் சொன்னவர் அவர். அவர் சொன்னது உண்மைதான் என்று இப்போது விஞ்ஞானம் கூறுகிறது! ஆனால் இதற்கெல்லாம் மேலே அவர் சொன்ன, நம்பிய, நிரூபித்த இன்னொரு முக்கியமான விஷயம்தான் அவர் எழுதிய இன்னொரு ஆராய்ச்சி நூல். அதுதான் World Without Cancer. கேன்ஸர் என்பது ஒரு நோயே அல்ல. அது ஒரு விட்டமின் குறைவின் அடையாளம். அந்த விட்டமினைக் கொடுத்தால் எந்தவகையான கேன்ஸரும் குணமாகிவிடும் என்று அந்த நூலில் அவர் சொன்னார்!

என்னது? கேன்ஸர் ஒரு நோயல்லவா? அது விட்டமின் குறைவின் பெயரா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவர் சொன்னது உண்மையானால், நாட்டில் உள்ள பல கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டுகளை மூடவேண்டி வரும்!

ஆனாலும் கேன்ஸர் ஒரு நோயல்ல; அது ஒரு விட்டமின் குறைபாடுதான்; அந்த விட்டமினுக்குப் பெயர் விட்டமின் B17 என்றும் அதற்கு இன்னொரு பெயர் லேட்ரைல் (Laetrile) என்றும் க்ரிஃபின் சொன்னார்.

ஆனால், அவர் சொன்னதை American Medical Association (AMA), American Cancer Society (ACS) மற்றும் Food and Drug Administration (FDA) எதுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. க்ரிஃபின் ஒரு ஏமாற்றுக்காரன் என்று சொன்னார்கள். ஆனால், அவர் எழுதிய அந்த நூல், அமெரிக்க நிறுவனங்கள் சொல்வதுதான் பொய் என்று நிரூபித்தது. கோடிக்கணக்கில் டாலர்களில் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலே பொய்யின் ஏமாற்று வேலையின் அடிப்படையில் நடக்கிறது என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன? சரி, க்ரிஃபின் என்னதான் சொன்னார், பார்க்கலாமா?

கேன்ஸர் என்பது என்ன?

கேன்ஸர் பற்றி அலோபதி என்ன சொல்கிறது? உயிரணுக்கள் திடீரென்று கன்னாபின்னாவென கட்டுக்கடங்காமல் எண்ணற்ற வகையில் பல்கிப் பெருகுவதன் பெயர்தான் கேன்ஸர் என்கிறது மேற்கத்தியப் பார்வை. நாள்பட்ட வியாதி என்பது (chronic disease) தானாகப் போய்விடுவதில்லை. வளர்சிதை மாற்றம் அடையும் ஒரு நோய் (metabolic disease) என்பது ஒருவரின் உடலில் மட்டும் தோன்றும் நோயாகும். அது இன்னொருவருக்குப் பரவாது. அதாவது, அது தொற்று நோயல்ல. கேன்ஸரானது நாள்பட்ட வியாதியாகவும் வளர்சிதை மாற்றமடைவதாகவும் உள்ளது என்கிறது அலோபதி.

க்ரிஃபின் என்ன சொல்கிறார்

சத்துக் குறைவால் ஏற்படும் ஒரு நோய்தான் கேன்ஸர். அது ஒரு வைரஸாலோ பாக்டீரியாவாலோ அல்லது ஒரு நச்சுப்பொருளாலோ உருவாவதல்ல. நவீனகால மனிதன் தன் உணவிலிருந்து நீக்கிவிட்ட ஒரு பொருளால் அது உண்டாகிறது. செய்ய வேண்டியதெல்லாம், இவ்வளவு காலமாக சாப்பிடாமல் இருந்த அந்த உணவுப் பண்டத்தை மீண்டும் நம் உணவில் சேர்த்துக்கொள்வதுதான். அப்பண்டம் எளிதில் கிடைக்கின்ற பண்டம் என்பது மட்டுமல்ல, மலிவானதும்கூட. அதை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். கேன்ஸர் இல்லாத உலகை உருவாக்கிவிட முடியும் என்கிறார் க்ரிஃபின்.

அந்த அற்புதப் பண்டம் எங்கே கிடைக்கும்? ஆராய்ச்சிக்கூடங்களிலா? அல்ல. நாம் சாப்பிடும் பழ விதைகளில் இருந்து கிடைக்கும்! நாம் வழக்கமாக, அல்லது வழக்கத்துக்கு மாறாகச் சாப்பிடும் பழ விதைகளில் கேன்ஸருக்கு மருந்து உள்ளது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. அதைக் கண்டுபிடித்து உண்ண அரசுகளின் பண உதவி தேவையில்லை. பிரத்தியேகமான டிப்ளமோ, டிகிரி எதுவும் படித்திருக்கத் தேவையில்லை.

அது ஒரு விட்டமினாகும். அதற்கு விட்டமின் பி17, லேட்ரைல் (Laetrile), அமிக்டாலின் (Amygdalin) என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அது பேரிக்காய், வாதுமை, பீச், ப்ளம் போன்ற பழங்கள், விதைகளில் உள்ள பொருளாகும்.

லேட்ரைல் சிகிச்சையும் விட்டமின் பி-யின் வரலாறும்

அமெரிக்காவில் லேட்ரைல் சிகிச்சை தடை செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான அமெரிக்க கேன்ஸர் நோயாளிகள், லேட்ரைல் சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்ட மெக்சிகோ, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். லேட்ரைல் சிகிச்சை என்பது பாரம்பரிய அலோபதி சிகிச்சைக்கு எதிரான ஒரு மாற்றுச் சிகிச்சையாகும்.

கேன்ஸர் என்பது உயிர்க்கொல்லி நோயாகும், இன்னும் சில மாதங்களே நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் என்றுதான் அமெரிக்க டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், நம்பமுடியாத அளவு அதிகமான நோயாளிகள் லேட்ரைல் சிகிச்சையினால் குணமடைந்து நார்மல் வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்கள். எனினும், அமெரிக்காவின் FDA, AMA மற்றும் American Cancer Society போன்றவை லேட்ரைல் சிகிச்சையானது போலி மருத்துவம் என்று கூறின. லேட்ரைல் சிகிச்சை எடுத்துக்கொண்ட யாராவது இறந்துபோனால், உடனே பாரம்பரிய அலோபதி மருத்துவத் துறை, “பார்த்தீர்களா? லேட்ரைல் சிகிச்சை ஒருவரைக் கொன்றுவிட்டது. அது ஒரு போலி மருத்துவம் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா?” என்று அலறியது!

ஆனால், பாரம்பரிய அலோபதி முறையில் கேன்ஸருக்காக அறுவை சிகிச்சை, ரேடியேஷன், கீமோதெரபி போன்றவை எடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். ஆனால், அதுபற்றி அமெரிக்க மருத்துவத் துறை மூச்சுவிடுவதில்லை! ஆனால், இப்படியெல்லாம் நடந்தாலும் தங்களது சிகிச்சை முறையே “பாதுகாப்பானது” என்றும் “பயனுள்ளது” என்றும் அவை கூறத் தயங்குவதில்லை.

‘1971-ம் ஆண்டுதான் நான் முதன்முதலில் ‘லேட்ரைல்’ என்ற சொல் என் காதில் விழுந்தது. நானும், மறைந்த டாக்டர் ஜான் ரிச்சர்ட்சனும் ஆரிகான் மாகாணத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காகச் சென்றிருந்தோம். அவருடைய சூட்கேஸில்தான் பல புத்தகங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இருந்தன. அதில் ஒன்றுதான் மனிதர்களுக்கு ஏற்படும் கேன்ஸர் என்ற வியாதிக்கு லேட்ரைல் சிகிச்சை பற்றிய புத்தகம்’.

‘இந்த ஆண்டு கேன்ஸரால் 5,50,000 அமெரிக்கர்கள் இறந்துபோவார்கள். நம்மில் மூன்றில் ஒருவருக்கு கேன்ஸர் வரும். அதாவது 88 மில்லியன் மக்களின் நிலை அமெரிக்காவில் மட்டும் இப்படியாகும் என்றெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது’!

‘பெல்லாக்ரா (Pellagra) எனப்படும் தோல் வறட்சி நோய், ஸ்கர்வி நோய் போன்றதுதான் கேன்ஸர் என்பதும். ஏனெனில், இவ்விரு நோய்களும் விட்டமின் குறைவினால் ஏற்படக்கூடிய பிரச்னைகளே. அதேபோல, கேன்ஸரும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள விட்டமின் குறைவினால் ஏற்படக்கூடிய பிரச்னையே தவிர பயப்படும்படியான நோயல்ல’. லேட்ரைல் சிகிச்சை பற்றி எப்படித் தெரியவந்தது என்று க்ரிஃபின் இவ்வாறாகக் கூறினார்.

விஞ்ஞானத்தால் ஒரு மருந்தை சந்தைக்குள் திணிக்கவும் முடியும், நோய் தீர்க்கக்கூடிய எதுவும் சந்தைக்கு வராமல் பார்த்துக்கொள்ளவும் முடியும்! ஏனெனில், அத்தீர்வுகள் மருந்துக் கம்பனிகளுக்கு எதிரான சக்திவாய்ந்த போட்டியாளர்களாகிவிடும் அபாயம் உள்ளது!

விஞ்ஞானத்தின் வரலாறே ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்ட தவறுகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாறுதான். உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகள் யாவும், முதலில் விஞ்ஞான சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் எள்ளி நகையாடப்பட்டார்கள். போலிகள் என்று தூற்றப்பட்டார்கள். ஏன், கடுமையாக தண்டிக்கவும் பட்டார்கள்.

இவ்வுலகம் உருண்டை என்று சொன்னதற்காக கொலம்பஸ் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தப் பிரபஞ்சத்தின் மையமல்ல பூமி என்று சொன்னதற்காக உயிருடன் கொளுத்தப்பட்டார் ப்ரூனோ. சூரியனைச் சுற்றிவருகிறது பூமி என்று சொன்னதற்காக கலீலியோ சிறையில் அடைக்கப்பட்டார். விமானம் கண்டுபிடிக்க முயன்றபோது, ரைட் சகோதர்களின் தந்தையே அவர்களிடம், “பிள்ளைகளே, பறக்கும் வேலையை பறவைகளிடம் விட்டுவிடுங்கள்” என்று கிண்டலடித்தார்.

1600 மற்றும் 1800-களில், பிரிட்டிஷ் கடற்படையில் ஸ்கர்வி நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் பத்து லட்சம்! என்னவிதமான வைரஸ் இந்தக் கப்பலுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது என்ற மருத்துவ விற்பன்னர்களின் கவலைக்கு அப்போது விடை கிடைக்கவில்லை. ஆனாலும், ஸ்கர்விக்கான குணப்படுத்தும் மருந்து பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுத்தான் இருந்தது!

1535-ல் ஒரு ஃப்ரெஞ்சுக் கப்பலில் ஸ்கர்வி வந்து 25 பேர் இறந்தனர். அக்கப்பலில் மொத்தம் இருந்தவர்களே 110 பேர்தான். மற்றவர்களும் பிழைக்க வழி தெரியவில்லை. அப்போதுதான் ஒரு இந்திய நண்பர் உதவினார். குறிப்பிட்ட ஒரு மரத்தின் பட்டையை அரைத்து, வெண் பைன் மரங்களின் ஊசி இலைகளையும் கலந்து குடிக்கக் கொடுத்தார். அனைவரும் குணமடைந்தனர். என்ன ஆச்சரியம்! ஒன்றுமில்லை, அவர் கொடுத்த மரப்பட்டை ஜூஸில் விட்டமின் சி இருந்தது! ஸ்கர்வி நோய் என்பது விட்டமின் சி குறைவுதான்! அதுபற்றி ஐரோப்பாவுக்குத் திரும்பிய கப்பல் கேப்டன் கார்டியர் எடுத்துச் சொன்னதை, ஐரோப்பிய அதிகாரிகள் நம்பவில்லை. அதைத் தொடர அனுமதிக்கவும் இல்லை. மோசமானதொரு பிரச்னைக்கான தீர்வு எளிமையானதாக இருக்க முடியாது என்பதே அவர்களது ‘விஞ்ஞானப்பூர்வமான’ நம்பிக்கையாக இருந்தது!

விஞ்ஞானத்தின் அந்தத் திமிர் காரணமாக, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஸ்கர்வி நோயால் சாகவேண்டி இருந்தது. கடைசியில், 1747-ல் ப்ரிட்டிஷ் கடற்படையில் இருந்த ஒரு டாக்டரின் நண்பர் ஜான் லிண்ட் என்பவர், ஆரஞ்சும் எலுமிச்சையும் ஸ்கர்வியிலிருந்து விடுதலை கொடுத்தது என்று கண்டுபிடித்தார். அதை ராயல் நேவிக்கு சிபாரிசு செய்தார். ஆனாலும், அவரது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்பட மேலும் 48 ஆண்டுகள் ஆயின!

கேன்ஸர் என்பது ஸ்கர்வி, பெல்லாக்ரா போன்ற ஒரு பிரச்னைதான். அதை வைரஸோ அல்லது நச்சுப் பொருள்களோ உருவாக்குவதில்லை. அது ஒரு விட்டமின் குறைபாடு மட்டுமே. மனிதனின் உணவில் அந்த முக்கிய விட்டமின் இல்லாமல் போவதால்தான் கேன்ஸர் உண்டாகிறது என்று 1952-ல் ஆண்டு டாக்டர் எர்னஸ்ட் டி. க்ரெப்ஸ் என்பவர்தான் முதன் முதலாக அறிவித்தார்.

அதுமட்டுமல்ல. கேன்ஸருக்கான மருந்தை இயற்கையே அபரிமிதமாக வைத்திருக்கிறது, உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 1200 வகையான தாவரங்களில் அது இருக்கிறது என்றும் அவர் கூறினார்! குறிப்பாக, கசப்பான வாதுமை (bitter almond), பேரிக்காய் (apricot), கைத்தடி எனும் மரவகை (blackthorn), செர்ரி, நெக்டரைன் என்ற பழவகை, பீச் பழம், ப்ளம் பழம், இவற்றில் மட்டுமின்றி புல், சோளம், சர்க்கரைச் சோளம் (sorghum), திணை (millet), மரவள்ளிக்கிழங்கு (cassava), ஆளிவிதை (linseed), ஆப்பிள் விதைகள், இன்னும் நவீன உணவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட பலவகை உணவுகளிலும் கேன்ஸருக்கான மருந்து உள்ளது என்று அவர் பட்டியலிட்டார்!

உணவும் அல்லாத, மருந்தும் அல்லாத அந்த விட்டமினின் பெயர் நைட்ரிலோசைட் (nitriloside) என்று அவர் கூறினார். இயற்கையான உணவுப்பண்டங்களில் இருக்கும் அது மருந்தாகச் செயல்படுகிறது. மருந்துகளில் உள்ளது போன்ற நச்சுப்பொருள் எதுவும் அதில் இல்லை. அது தண்ணீரில் கரையக்கூடியது என்றெல்லாம் அவர் கூறினார். இப்படியெல்லாம் சொன்ன அவர், விட்டமின் குடும்பத்தின் கடைசி உறுப்பினராக, அதற்கு விட்டமின் பி-17 என்று ஞானஸ்நானம் செய்தார்!

இன்னும் உள்ளது, பார்க்கத்தானே போகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com