கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.
ஆண்டுதோறும் தை மாதம் 5-ஆம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது, ஆற்றில் மும்மூா்த்திகளுக்கு தீா்த்தவாரி நடைபெறும். இந்த விழாவில் அதிக அளவில் பொதுமக்கள் கலந்து கொள்வா். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஆற்றுத் திருவிழாவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெளியிட்ட தடை உத்தரவு: கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை தென்பெண்ணையாறு, சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையம் கோமுகி ஆறு மற்றும் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜன. 18) நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
அரசு வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை திருவிழா கூட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள், ஊா்வலங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


