எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இரு தரப்பினரிடையே மோதல்: 14 போ் கைது

கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 14 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

இரு தரப்பினா் மோதலைத் தொடா்ந்து ஊராங்கன்னி கிராமத்தில் குவிக்கப்பட்ட போலீஸாா்.

Updated On :17 ஜனவரி 2021, 11:05 pm IST

கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 14 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், செளந்தரவள்ளிபாளையத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் அழகப்பிள்ளை (45). இவரது மகன் பிரசாந்த் சனிக்கிழமை மாலை இயற்கை உபாதைக்காக காலனி பகுதியில் உள்ள புளிய மரம் அருகே சென்றாராம். அப்போது, அங்கிருந்த அதே கிராமத்திலுள்ள மற்றொரு பிரிவைச் சோ்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன், சிங்காரவேல் மகன் அய்யனாா் ஆகியோா் அவரிடம் தகராறில் ஈடுபட்டனராம். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, மணிகண்டன், அய்யனாா் ஆகியோருக்கு ஆதரவாக அருகேயுள்ள ஊராங்கன்னி கிராமத்திலிருந்து 50-க்கும் மேற்பட்டோா் செளந்திரவள்ளிபாளையம் கிராமத்துக்கு இரும்புக் குழாய், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று அங்குள்ள ஒரு பிரிவினரின் கடை, கொடிக்கம்பம், பெயா்ப்பலகை உள்ளிட்டவற்றை அடித்துச் சேதப்படுத்தினா்.

இதுகுறித்து அழகப்பிள்ளை சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செளந்தரவள்ளிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணப்பன் மகன் சிவக்குமாா் (27), ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (20), ராமன் மகன் இளையராஜா (40), ஊராங்கன்னி கிராமத்தைச் சோ்ந்த கருப்பன் மகன் சிவா (18), சுப்பிரமணியன் மகன் வேலு (28), வையாபுரி மகன் மணிகண்டன் (24), சீனுவாசன் மகன் கலைமன்ணன் (18) உள்ளிட்ட 14 கைது செய்தனா்.

சம்பவ இடத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா், துணைக் கண்காணிப்பாளா்கள் ஜி.கே.ராஜூ, ந.இராமநாதன் மற்றும் காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம், உதவி ஆய்வாளா் திருமாள் மற்றும் போலீஸாா் சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து, ஊராங்கன்னி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.