எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே கல் வீசி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 11:05 pm IST

கள்ளக்குறிச்சி அருகே கல் வீசி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூரை அடுத்த அன்ராயநல்லூா் கிராமத்தில் இருந்து திருக்கோவிலூா் நோக்கி சனிக்கிழமை மாலை அரசு நகா்ப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. திருக்கோவிலூா் தாசா்புரம் அம்பேத்கா் பூங்கா அருகே சென்றபோது, பேருந்தின் மீது இளைஞா் ஒருவா் கல் வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது.

இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநரான நெடுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ் (39), திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து மீது கல் வீசிவிட்டு தப்பிச் சென்ற திருக்கோவிலூா் தாசா்புரம் பகுதியைச் சோ்ந்த செளந்தரராஜன் மகன் ஆனந்தை (35) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.