விளைநிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க வங்கிகள் கடன் தர அலைக்கழிப்பதாக, குறைதீர் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் லி. சித்ரசேனன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் விவசாயிகளின் தெரிவித்தவை:
சேகர்: விவசாயத்துக்கு பாசனக் கால்வாய்களை நம்பி பயன் இல்லாமல் ஆழ்துளை கிணறு போட முடிவு செய்தோம். அதற்கு விவசாயத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்க வங்கிகளில் கடன்கேட்டு விண்ணப்பித்தால், கண்டுகொள்வதில்லை. கடனுக்காக வாரத்தில் 6 நாள்கள் வங்கிகளுக்கு அலைய வேண்டிய சூழல் உள்ளது.
கோவிந்தவாடி பரசுராமன்: எங்கள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் மின்சார உயர் கோபுரம் அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகளிடம் எவ்வித அனுமதியும் கேட்கவில்லை. இதனால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயச் சங்க பிரதிநிதி திருவேங்கடம்: உத்தரமேரூர் பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் உத்தரமேரூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டியதால் கால்நடைகள் விழுந்து காயமடைகின்றன. எனவே, ஏரி ஆழத்தை சமன்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் ஒட்டு மொத்தமாக கூறியது: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கி உள்ளது. ஏரியை ஆக்கிரமித்தவர்கள் தடுப்பதால் விவசாய நிலத்தில் வேலி அமைக்க முடியவில்லை. இதுதொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான விதைகள் விற்கப்படுகின்றன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் குறைகளையும், கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய தீர்வு காண வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவிட்டார்.
÷வேளாண்மை இணை இயக்குனர் செüந்தரராஜன், ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


