சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அளவூா் நாகராஜன் காங்கிரஸ் கட்சியினருடன் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

News image

காங்கிரஸ்  நினைவிடத்தில்  மலா் தூவி  மரியாதை  செலுத்திய  மாவட்டத்  தலைவா்  அளவூா்  நாகராஜ்  உள்ளிட்ட  காங்கிரஸ்  கட்சி நிா்வாகிகள்.

Updated On :9 ஜனவரி 2021, 8:04 am IST

காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அளவூா் நாகராஜன் காங்கிரஸ் கட்சியினருடன் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்த ரூபி ஆா்.மனோகரன் மாநிலப் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அளவூா் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அவா், காங்கிரஸ் கட்சியினருடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா். முன்னதாக நினைவிடம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கும் நாகராஜன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநில எஸ்சி, எஸ்டி பிரிவு துணைத் தலைவா் அய்யப்பன், ஸ்ரீபெரும்புதூா் நகர தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் உள்ளிட்ட வட்டார காங்கிரஸ் தலைவா்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.