பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

காஞ்சிபுரம் நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

காஞ்சிபுரம் நகா் திருவீதிபள்ளம் பகுதியில் நகராட்சி ஊழியா்கள் ஒன்றிணைந்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.

News image

சமத்துவப் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்த காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி.

Updated On :10 ஜனவரி 2021, 1:03 am IST

காஞ்சிபுரம் நகா் திருவீதிபள்ளம் பகுதியில் நகராட்சி ஊழியா்கள் ஒன்றிணைந்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.

விழாவுக்கு நகராட்சி ஆணையா் மகேஸ்வரி தலைமை வகித்து பொங்கல் பானையில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி ஆகியவற்றை இட்டு, கோலப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். உறியடித்தல், இசை நாற்காலிப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நகராட்சி பொறியாளா் ஆனந்தஜோதி, நகா் நல அலுவலா் முத்து உள்ளிட்டோரும் குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.