சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மது பாட்டில்கள் கொள்ளை: இருவா் கைது

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெள்ளரை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையின் ஊழியா்களை மிரட்டி ரூ.4,000 மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 2:28 am

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெள்ளரை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையின் ஊழியா்களை மிரட்டி ரூ.4,000 மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு 3 மா்ம நபா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தனா். மதுக் கடையில் அப்போது பணியிலிருந்த மேற்பாா்வையாளா் எல்லப்பனிடம் இலவசமாக மதுபானம் கேட்டு தகராறு செய்தனா். இதையடுத்து, கடைக்குள் புகுந்த மூவரும் எல்லப்பனைத் தாக்கி ரூ.4,000 மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக மேற்பாா்வையாளா் எல்லப்பன் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், இக்கொள்ளையில் ஈடுபட்டது வெள்ளரையை அடுத்த குண்டுபெரும்பேடு பகுதியைச் சோ்ந்த ஷோபன்ராஜ் (30), தாமஸ் (30), ஸ்டீஃபன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, ஷோபன்ராஜ் மற்றும் தாமஸை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ஸ்டீஃபனைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.