ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

முதலையின் வாயில் இருந்து தப்பி வந்தேன்!

சுவாமிஜியின் சொற்பொழிவுகள் எல்லா இடங்களிலும் வரவேற்பைப் பெற்றன. பரந்த மனப்பான்மை உடையவர்களான யூனிடேரியன்கள் அவரை மிகவும் விரும்பி அழைத்தார்கள்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:54 am

சுவாமிஜியின் சொற்பொழிவுகள் எல்லா இடங்களிலும் வரவேற்பைப் பெற்றன. பரந்த மனப்பான்மை உடையவர்களான யூனிடேரியன்கள் அவரை மிகவும் விரும்பி அழைத்தார்கள். யூனிடேரியன் கிறிஸ்தவப் பாதிரிகள் அவரைத் தங்கள் சர்ச்சுக்கு விரும்பி அழைத்ததுடன், அங்கேயே சொற்பொழிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் சுவாமிஜி கூறிய கருத்துக்கள்? அவை அவ்வளவு சுலபமாக ஏற்கக் கூடியவை அல்லவே! காலங்காலமாக இந்தியாவைப்பற்றி தாங்கள் கேள்விப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் ஒருபக்கச் சார்புடையவை, பெரும்பாலானவை முற்றிலும் தவறானவை என்று ஒருவர் கூறுவதைச் சட்டென்று அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால் சொல்பவர் சாதாரணமானவர் அல்ல. சொல்வதற்கென்றே இறைவனின் ஆணை பெற்று வந்தவர். எனவே அவர்களால் சுவாமிஜியின் கருத்துக்களை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதனால் பல கேள்விகளை எழுப்பினார்கள். சுவாமிஜியும் அவற்றைத் தயக்கமின்றி எதிர்கொண்டார். எண்மையைத் தைரியமாக எடுத்துச் சொல்வதற்கான துணிச்சல் அவரிடம் இருந்தது. சில நேரங்களில் நேரடியாகப் பதில் கூறினார், சில வேளைகளில் பீரங்கிக் குண்டு போல் வெடித்தார், சில சமயங்களில் வேடிக்கையாகப் பதிலளித்தார்.

இப்படித்தான் ஒருமுறை அவர் மின்னாபொலிஸில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்து, 'ஆமாம் சுவாமிஜி, இந்துத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை முதலைகளின் வாயில் எறிவார்களாமே!' என்று கேட்டார். முகத்தில் கேலிப்  புன்னகை எழுந்து பரவ சுவாமிஜி, 'ஆம், அது உண்மைதான். என்னையும் அப்படித் தான் எறிந்தார்கள். நான் என்னவோ உங்கள் ஜோனாவைப் போல் முதலையின் வாயிலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்றார். கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.