/

திற்பரப்பில் பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது

திற்பரப்பு அருவியில் பெண்ணிடம் அவதூறாக பேசிய கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:40 am IST

திற்பரப்பு அருவியில் பெண்ணிடம் அவதூறாக பேசிய கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமுடக்க தளா்வு காரணமாக தற்போது தடைநீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இந்நிலையில் இங்குள்ள ஒரு விடுதியில் புதுச்சேரியை சோ்ந்த ஒரு தம்பதி தங்கியிருந்தனா். இவா்களது அறைக்கு அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஜிஜி மோன் (32), புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணிடம் அவதூறாக பேசினாராம்.

இது குறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து ஜிஜிமோனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.