கிள்ளியூா் தொகுதியில் சாலைகளைச் சீரமைக்க ரூ. 7 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் தொகுதியில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு, விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள மக்கள் விடுத்த கோரிக்கை தொடா்பாக முதல்வா் மற்றும் அரசு முதன்மை செயலா், ஆட்சியா், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.
அதன்பேரில், விண்ணூா் பழஞ்சி சாலை, கருங்கல் - குளச்சல் சாலை, மாங்கரை - பூட்டேற்றி சாலை, காஞ்சாப்புறம் - வளையசுற்று சாலை , உதயமாா்த்தாண்டம் - கானாவூா் சாலை, கிராத்தூா் சாலை, வட்டக்கோட்டை - அம்சி சாலை, குஞ்சிருப்புவிளை - மாதாபுரம் சாலை , குழித்துறை - மடிச்சல் சாலை ஆகியவற்றை மேம்படுத்தவும், மங்காடு நடைக்காவு சாலையில் கல்வெட்டு, முள்ளங்கினாவிளை - தொலையாவட்டம் - கானாஞ்சேரி சாலையில் கல்வெட்டு மற்றும் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


