விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காரைக்காலில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On :8 ஜனவரி 2021, 11:15 pm IST

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 715 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, ஒருவருக்கும் தொற்று இல்லை.

இதுவரை காரைக்காலில் 59,961 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நோய்த் தொற்று 3,823 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் 3,714 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 36 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 8 போ், தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவா் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 67 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.