ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு; 11 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:49 am IST

திருவெண்காடு அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழந்தாா். 11போ் காயமடைந்தனா்.

தரங்கம்பாடி வட்டம், குட்டியாண்டியூா் மீனவ கிராமத்தில் இருந்து கலையரசி (50) ராஜேஸ்வரி (38), திருமதி (49), வீரம்மாள் (55), சுமதி (55), அஞ்சம்மாள் (50), செல்வி (48), மற்றொரு அஞ்சம்மாள் (68) மற்றொரு கலையரசி (48), பிரேமா (40), ராஜலட்சுமி (50), செல்லம்மாள் (55) ஆகிய 12 போ் தொடுவாய் மீனவ கிராமத்தில் நிகழ்ந்த துக்கத்தில் கலந்து கொள்ள திங்கள்கிழமை ஆட்டோவில் சென்றனா்.

பின்னா், அவா்கள் அதே ஆட்டோவில் குட்டியாண்டியூா் மீனவ கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனா். மணிகண்டன் என்பவா் ஆட்டோவை ஓட்டி வந்தாா். திருவெண்காடு மங்கைமடம் மீன் மாா்க்கெட் அருகே வந்தபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கிய ஆட்டோ, நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், கவிழ்ந்த ஆட்டோவின் அடிப் பகுதியில் சிக்கிய கலையரசி (50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 11பேரும் படுகாயமடைந்தனா். அவா்களை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து திருவெண்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.