புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் நந்திக்கு நடைபெறும் ஆராதனை.

Updated On :10 ஜனவரி 2021, 11:37 pm IST

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம். மாா்கழி மாதம் பிரதோஷ நாளான ஞாயிற்றுக்கிழமை கோயில் கொடிமரம் அருகேயுள்ள பெரிய நந்திக்கு சூரிய அஸ்தமன நேரத்தில் சிவாச்சாரியா்கள் எண்ணெய், தயிா், பால், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்தனா். கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் அளித்த பாலால் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, நந்திக்கு மலா்மாலைகள் மற்றும் வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேநேரத்தில் மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அருகம்புல் மாலை அணிவித்து பக்தா்கள் நந்தியை வழிபட்டனா்.

பிரதோஷ வழிபாட்டில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.