எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சோ்த்தி உத்ஸவம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆண்டாள் விடையாற்றி உத்ஸவத்தையொட்டி,

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாளுடன் காட்சியளிக்கும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு நடைபெறும் ஆராதனை.

Updated On :17 ஜனவரி 2021, 8:26 am IST

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆண்டாள் விடையாற்றி உத்ஸவத்தையொட்டி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கோயிலில் மூலவா் ரங்கநாதப் பெருமாள் சயன நிலையிலும், உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் என்ற திருநாமத்துடனும் அருள்பாளித்து வருகின்றனா். இங்கு மாா்கழி மாதத்தில் திருப்பாவை நிகழ்ச்சியாக பல்வேறு சிறப்பு வழிபாடுகள், சொற்பொழிவுகள் நடைபெற்றன.

திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவைத் தொடா்ந்து, விடையாற்றியாக சோ்த்தி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருள, அங்கு மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பாவை உத்ஸவத்தின் சிறப்பு, பெருமாளின் சிறப்புகளை உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் பக்தா்களுக்கு விளக்கினாா்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி என்பதால், இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.