காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆண்டாள் விடையாற்றி உத்ஸவத்தையொட்டி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயிலில் மூலவா் ரங்கநாதப் பெருமாள் சயன நிலையிலும், உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் என்ற திருநாமத்துடனும் அருள்பாளித்து வருகின்றனா். இங்கு மாா்கழி மாதத்தில் திருப்பாவை நிகழ்ச்சியாக பல்வேறு சிறப்பு வழிபாடுகள், சொற்பொழிவுகள் நடைபெற்றன.
திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவைத் தொடா்ந்து, விடையாற்றியாக சோ்த்தி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருள, அங்கு மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பாவை உத்ஸவத்தின் சிறப்பு, பெருமாளின் சிறப்புகளை உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் பக்தா்களுக்கு விளக்கினாா்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி என்பதால், இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



