குளித்தலையில் புகைப்பட கலைஞரின் வீட்டுப் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன் மகன் விஜய்ஆனந்த் (40). புகைப்பட கலைஞரான இவர், இரண்டு நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு பொன்னமராவதிக்கு குடும்பத்துடன் சென்றார்.
புதன்கிழமை காலை அவர் தனது வீட்டுக்கு வந்த போது, வீட்டு முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் உள்ள பொருள்கள் சிதறிக்கிடந்தனவாம்.
இதுகுறித்து குளித்தலை போலீஸாருக்கு விஜய்ஆனந்த் தகவல் அளித்தார். இதையடுத்து, போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த தங்க நகைகள், ரூ. 2 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள பொருள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

ஆதார் - மின்னஞ்சல் இணைப்பு இனி இலவசம்! அதனால் பயனென்ன?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

சேலம் அருகே கழுத்தறுத்து ஒருவர் கொலை! காவிரியில் வீசப்பட்ட சடலம்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


