பல்வேறு போலி திட்டங்களை நம்பி தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், அவ்வாறு செய்யும் முன் மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரித்து முதலீடு செய்ய வேண்டும் எனவும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கரூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள், அதிக வட்டித் தருவதாக சொல்லும் போலி நிதி நிறுவனங்கள், ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு, கொப்பரைத் தேங்காய் திட்டம் என்ற பெயரிலும், வேறு வழிகளிலும் லாபம் கிடைக்கும் என்று நம்பியும் இவற்றில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.
தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாயமாக ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வைப்புத்தொகை வாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனியார் நிதி நிறுவனங்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் முதிர்வு காலத்துக்கு மட்டுமே வைப்புத் தொகையை பெற முடியும்.
இந்த நிறுவனங்கள் அதிகபட்சம் 12.5% மட்டுமே வட்டி அளிக்க முடியும். இத்தகைய நிதி நிறுவனங்கள் வைப்புத்தொகையை பெறுவதற்கு பரிசு, ஊக்கத்தொகை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் விசாரித்து முதலீடு செய்ய வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலையில் குறைந்த தங்கம் பிற்பகலில் உயர்வு! (ஜூன் 30)

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

ஆதார் - மின்னஞ்சல் இணைப்பு இனி இலவசம்! அதனால் பயனென்ன?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


