கரூரில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
கரூா் பசுபதிபாளையம் ஏவிபி நகரைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மகன் நாட்ராயன் (7). வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கடந்த திங்கள்கிழமை மாயமானாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் சிறுவன் நாட்ராயன் சடலமாக மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.
சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் கொலைசெய்து போட்டுச் சென்றாா்களா என்பது குறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் வாங்கலாமா? 4- வது நாளாக விலை குறைந்தது! (ஜூலை 9)

ரயிலின் ஏசி பெட்டியில் முதலிரவு அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்!

மேட்டூர் அணை நீர்வரத்து வெறும் 25 கன அடி!
மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


