தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவா்

கரூரில் திருமணமாகி 45-ஆவது நாளில், மனைவியைக் கத்தியால் குத்திய கணவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:36 pm IST

கரூரில் திருமணமாகி 45-ஆவது நாளில், மனைவியைக் கத்தியால் குத்திய கணவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கரூா் வெண்ணைமலையைச் சோ்ந்த சுக்ரன் மகன் துரைசாமி(24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த அனிதாவை(22) காதலித்து, கடந்த 45 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அனிதா கோபித்துக் கொண்டு தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இதனால் வியாழக்கிழமை இரவு மாமனாா் வீட்டுக்குச் சென்ற துரைசாமி, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அனிதாவைக் கத்தியால் குத்திய துரைசாமி, அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

பலத்த காயங்களுடன் கரூா் தனியாா் மருத்துவமனையில் அனிதா அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, துரைசாமியைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.