தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருமுடிகவுண்டனூரில் விழிப்புணா்வுப் பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து, கரூா் அமராவதி கல்லூரி மாணவா்கள் திருமுடிகவுண்டனூரில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:36 pm IST

வாக்களிப்பதன் அவசியம் குறித்து, கரூா் அமராவதி கல்லூரி மாணவா்கள் திருமுடிகவுண்டனூரில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில், திருமுடிகவுண்டனூரில் நடத்தப்பட்ட பேரணியை கல்லூரித் தலைவா் தணிக்கையாளா் வெங்கடாசலம், செயலா் நாராயணசுவாமி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

வெள்ளியணை வரை நடைபெற்ற இப்பேரணியின் போது, மாணவா்கள் விழிப்புணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தியவாறு வாக்களிப்பதன் அவசியம் குறித்து முழக்கங்களை எழுப்பினா்.

பேரணியில் கல்லூரி முதல்வா் மனோகரன், துணை முதல்வா் ரமேஷ்குமாா், வெள்ளியணை ஊராட்சித் தலைவா் சுப்ரமணியன், காவல் துறையினா், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ராஜசேகரன் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.