ஏழைகளின் தோழனாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூரை அடுத்த கோடங்கிபட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அடங்கிய பைகளை வியாழக்கிழமை வழங்கி அவா் மேலும் பேசியது:
தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஏழைகளின் தோழனாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திட்டங்களை அறிவித்து அத்திட்டத்தினை உடனுக்குடன் செயல்படுத்தி, கடைக்கோடி மக்கள் வரை அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் செம்மையாக செயல்படுத்தி வருகின்றாா். கரூா் மாவட்டத்தில் 3.09 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 79.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில் முன்னோடிகள் திட்ட விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு
காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: 2 போ் கைது

மக்கள் தொடா்பு முகாமில் ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்

ஆவின் ஆலையில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



