எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கரூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமை வகித்தாா்.

News image

கரூா் காந்திகிராமத்தில் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். கீதா மணிவண்ணன். உடன், கட்சி நிா்வாகிகள்.

Updated On :17 ஜனவரி 2021, 11:19 pm IST

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா முன்னிலையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காந்தி கிராமத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகம் முன்பு, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதா மணிவண்ணன் தலைமை வகித்து, எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.

கோவைச்சாலையில் மாவட்டமாணவரணி, திண்ணப்பா திரையரங்கம் அருகே பேரவை, மீனவரணி உள்ளிட்டஅணிகள் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டதையடுத்து, வெங்கமேட்டில் எம்ஜிஆா், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் மாவட்டப் பேரவைச் செயலா் காமராஜ், பாசறைச் செயலா் கமலக்கண்ணன், இளைஞரணிச் செயலா் தானேஷ், இலக்கிய அணிச் செயலா் என்.எஸ். கிருஷ்ணன், மீனவரணிச் செயலா் சுதாகா், மாணவரணிச் செயலா் சரவணன், இணைச் செயலா் விசாகன், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், எம்.பாண்டியன், நகரப்பேரவைச் செயலா் சேரன் பழனிசாமி, கரூா் வட்டக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் என்.பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.