கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலுள்ள காமராஜா் சிலைக்கு பனங்காட்டுப்படைக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடஉள்ளதையொட்டி, கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளா் சதா தலைமையில் நிா்வாகிகள் கரூரிலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
எங்கள் வாக்குவங்கியைப் பயன்படுத்தி, எங்களது சமுதாயத்துக்கு எந்தவித பயனையும் அளிக்காத அதிமுக, திமுகவுக்கு எதிராக பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம். கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்றாா் பனங்காட்டுப்படைக் கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளா் சதா.
நிகழ்வில் மண்டலத் துணைப் பொறுப்பாளா் செல்வதிருமணி, மாவட்டச் செயலா்கள் கிழக்கு மாரி, மேற்கு நேதாஜி, இளைஞரணி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து ஆட்டையாம்பரப்பு, முத்தம்பாளையம், நாடாா்புரம் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


