அந்தப் பல் டாக்டர் எப்படி?
பல்லைவிட பணத்தை நல்லாப் பிடுங்குவார்!
என்ன டாக்டர்... மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன் பண்றீங்க?
அப்பதானே நீங்க என்னை சாகுற வரைக்கும் மறக்கமாட்டீங்க!
-தீபிகா சாரதி, சென்னை.
புலவருக்கு வெற்றுக் கவரை கொடுத்திருக்கிறீர்களே, மன்னா?
அவர் பாடலில் மட்டும் ஏதாவது பொருள் இருந்ததா என்ன?
எனக்கு முன்புத்தி... என் மனைவிக்கு பின்புத்தி...
எப்படிச் சொல்றீங்க?
என் பேரு, மதி' யழகன்; மனைவி பேரு பானு மதி'!
அந்தப் பாடகர் ஏன் கண்ணை மூடிக்கிட்டுப் பாடுறார்?
ஆடியன்úஸôட ரீயாக்ஷனை பார்த்துட்டா... அதுக்குப் பிறகு அவரால பாட முடியாதே!
அவருக்கு திடீர்னு மூச்சுப் பிடிப்பு வந்துடிச்சாம்!
வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லைன்னு சொல்லிட்டிருந்தாருல்ல..!
-வி. ரேவதி, தஞ்சை.
டாக்டர், எனக்கு மறுஜென்மம் கொடுத்துட்டீங்க!
ஆபரேஷனை கேன்சல் செஞ்சதைத்தானே சொல்றே?
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
சீக்கிரம் சாப்பாடு போடு தாயி?
என்ன அவசரம், வீட்டுக்குப் போய் தூங்கதானே போறே?
இல்ல தாயி... நைட் வாட்ச்மேன் வேலையில சேர்ந்திருக்கேன்!
என் பையனுக்கு நான் தான் சார் ஹோம் ஒர்க் பண்ணிக் கொடுக்குறேன்!
நீங்க தானா அது... ஏறுங்க பெஞ்சு மேல!
ஏன் ராப்பிச்சை நாயையும் கூட்டி வந்திருக்கே?
சில வீட்டுல சோறுக்குப் பதில் பிஸ்கட் போடுறாங்க... தாயி!
தலைவரை அப்பாவின்னு ஏன் சொல்றே?
தொலைநோக்கு பார்வை கிடைக்க சிகிச்சை பண்ணுங்கன்னு கண் டாக்டர்கிட்டச் சொல்றாரே?
-பர்வீன் யூனுஸ், சென்னை.
கூழ் ஊற்றலையா?
ஆன் லைன்ல ஆர்டர் பண்ணியாச்சு... இப்ப வந்துடும்.
காணாமல் போன என் நகை வட்டிக் கடைக்காரர் கையில் கிடைச்சிருக்கு.
கொடுத்தாரா?
அடகுல வச்சுக்கிட்டு கடன் கொடுத்தார்.
அடிஷனல் கொஸ்டியன் பேப்பர் இருந்தால் கொடுங்க, சார்!
எதுக்கு?
இந்தப் பேப்பர்ல எந்தக் கேள்விக்கும் விடை தெரியலை!
இட்லி ஏன் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கு?
இது, ஸ்பெஷல் ட்வின்ஸ் இட்லி, சார்!
மழைக்கு இரவல் வாங்கிப் போன குடை என்ன ஆச்சு?
வெயிலுக்கு வச்சுக்கிட்டேன், சார்!
பச்சைக் கிளிக்கும் பஞ்சவர்ண கிளிக்கும் என்ன வித்தியாசம்?
பஞ்சவர்ண கிளிக்கு பச்சைக் கிளி போல் சோதிடம் சொல்ல வராது!
கெட்ட கனவு வராமல் இருக்க என்ன செய்ய?
சவுன்டா குறட்டை விடு. பயந்து போய் கனவு வராது!
- பர்வதவர்த்தினி, பம்மல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




