சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

சிரி... சிரி...

அரிசியில் தானே பெயர் எழுதித் தருவாங்க... அவர் என்ன கோதுமையில் எழுதித் தர்றாரு?

Updated On :18 ஜூலை 2026, 7:54 pm IST

'அரிசியில் தானே பெயர் எழுதித் தருவாங்க... அவர் என்ன கோதுமையில் எழுதித் தர்றாரு?'

'அவர் சுகர் ஸ்பெஷலிஸ்ட் ஓவியராம்!'

-எம்.பி. தினேஷ், கோவை - 25.



'அந்தப் படம் படு போர் . இருந்தாலும் எல்லோரும் கடைசிவரை படத்தைப் பார்த்தாங்களா... எப்படி?'

'படம் ஆரம்பிச்சதும் வெளிக்கதவை இழுத்துப் பூட்டிடுறாங்களாம்!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'கோழிக் கூவும்போது என்னை எழுப்பச் சொன்னனே... ஏன் எழுப்பலை?'

'அந்தக் கோழியை உங்கப்பா நடுராத்திரியில அடிச்சுக் குழம்பு வச்சிட்டாரே!'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.



'தலைவர் எதுக்கு ஜிம்முக்குப் போய் உடம்பைக் குறைக்கிறார்?'

'தலைவர் ரொம்ப குண்டா இருக்கிறதால அவரால கட்சித் தாவ முடியலையாம்!'



'டைலர் அந்தப் பொம்பளையோட துணியை வாங்கி வைச்சுக்கிட்டு ரொம்ப நாளா தைக்காம இருக்காரு...'

'அதான், அந்தப் பொம்பளை கடைக்கு வந்து 'தை தை'ன்னு குதிக்கிறாங்களா?'

-தீபிகா சாரதி, சென்னை -5



'வம்புக்கினியாள்.'

'யாரது?'

'நம்ம வேலைக்காரம்மாதான்.'



'மருமகள் கிச்சனுக்குள் ஓடினா உனக்கு என்ன பயம்?'

'ஆயுதக் கிடங்கு அங்கே தானே இருக்கு!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்...'

'அப்ப சுகர் பேஷண்டுக்கு நல்லதுன்னு சொல்லுங்க!'



'உங்களுக்கு கல்யாணமானால் பொறுப்பு தானாக வந்துவிடும்.'

'வாஸ்தவம்தான்... இப்போதுதான் ரேஷன் கடையில் பருப்பு வாங்கி வந்தேன்.'



'மாப்பிள்ளை கல்யாண மண்டபத்தில் சிலம்பாட்டம் ஆடிக்காட்டுகிறாரே?'

'இன்று ஒரு நாள் தானே ஆடிவிட்டுப் போகட்டும். நாளையில் இருந்து என் மகள் ஆட்டத்தைப் பார்!'



'ஏண்டி... ஹாஸ்டலில் தங்கிப் படித்த பையனைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றே?'

'அவங்கதான் நாம் என்ன செஞ்சுப் போட்டாலும் ஒண்ணும் சொல்லாமச் சாப்பிடுவாங்க!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'குடிச்சிட்டுப்போனா என் மனைவி எப்படியாவது கண்டுபிடிச்சிடுறா!'

'நீதான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல் 'தஸ்சு... புஸ்சு'ன்னு இங்கிலீஷ்ல ஏதாவது

உளறுவியே!'



'நண்பர்களோடு ஹோட்டலுக்குப் போனப்ப, சாப்பிடறதுக்கு முன்னாடியே சர்வர் கையில இருபது ரூபா வச்சு அழுத்தினீயே, ஏன்?'

'இல்லாட்டி பில்லை நம்ப கையில திணிச்சிட்டுப் போயிருப்பாரே!'



'உங்க மனைவியோட பெயரை 'சபாநாயகி'ன்னு சேவ் பண்ணியிருக்கீங்களா, ஏன் சார்?'

'அவங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கு, சார் !'



'இந்த டெக்னாலஜியிலயெல்லாம் எனக்கு நம்பிக்கையே போயிடிச்சுங்க!'

'இன்டர்நெட் மூலமா பொண்ணு தேடி கல்யாணம் பண்ணிக்கிட்டியில்ல... அப்படித்தான் இருக்கும்!'



'தலைவரோட பேச்சுல நல்ல முன்னேற்றம் தெரியுது, சார்!'

'எப்படிச் சொல்றீங்க?'

'முன்னாடில்லாம் அவர் பேசும்போது எல்லாரும் குறட்டைதான் விடுவாங்க; இப்ப கொட்டாவியோடு நிறுத்திக்கிறாங்களே!'



'அந்த நாட்டு டாக்டர் சரியான நக்கல் பேர்வழி...'

'எப்படிச் சொல்றீங்க?'

'மருந்தை நல்லா பொடிச்சு தேன்ல குழைச்சு நக்குங்கன்னு சொல்றாரே!'



'என் பையனுக்கு 25 வயசு ஆகுதே தவிர, யாரையும் மதிக்கவே மாட்டேங்கிறான், சார் ?'

'அவனுக்கு உடனே ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க... பொண்டாட்டியை மதிக்கிறானா, இல்லையான்னு பாருங்க!'



'இந்தக் கல்யாண ஜோடி ரொம்ப முற்போக்காம்...'

'அதுக்காக, பையன் கழுத்துல பொண்ணு தாலி கட்டுறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க!'

- வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.