மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

சிரி... சிரி... | 27-09-2026

எதுக்குங்க என்னோட முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளிக்கறீங்க?

Published On :

'எதுக்குங்க என்னோட முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளிக்கறீங்க?'

'உங்கப்பா உன்னை பூ மாதிரி பார்த்துக்கச் சொன்னாரே!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

--------------------------------------------------------------------------------------

' வடையில் என்ன ரெண்டு ஓட்டை?'

'சாம்பாருக்கு ஒண்ணு... சட்னிக்கு ஒண்ணு, சார்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.

--------------------------------------------------------------------------------------


'உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது, சமைக்கும்போது மொபைலை யூஸ் பண்ணாதேன்னு... ரசத்துல உப்பும் இல்லை, புளிப்பும் இல்லை!'

'நானும் உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது, சாப்பிடும்போது மொபைல் பார்க்க வேண்டாம்னு... நீங்க சோத்துல ஊத்துனது தண்ணீர்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

--------------------------------------------------------------------------------------


'தலைவருக்கு பாவம் பேக் பெயினாம்!'

'ஏன்?'

'தலைவரை எல்லாரும் முதுகுல குத்திட்டாங்களாம்!'

-தீபிகா சாரதி, சென்னை- 5.

--------------------------------------------------------------------------------------

'பாதி சாப்பாட்டுல எங்க எழுந்து போறீங்க?'

'சாப்பாட்டுக்கு மத்தியில் ஒரு மாத்திரை போடச்சொல்லி, டாக்டர் எழுதியிருக்காரு!'

-அ.ரியாஸ், சேலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.