
சிரி... சிரி...
'தலைவரே... நீங்க பிறமொழிகளைக் கத்துக்கலையா?
'தலைவரே... நீங்க பிறமொழிகளைக் கத்துக்கலையா?'
'எனக்கு தமிழே தகராறுய்யா!'
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
'என்ன அந்த ஸ்கூல் ஒரே இருட்டா இருக்குது?'
'அந்த ஸ்கூல்லதான் அடிக்கடி 'பீஸை' பிடுங்குவாங்களே!'
-தீபிகா சாரதி, சென்னை -5.
'மழை வெள்ளத்தில் அடிச்சிட்டுப் போய் மண் திட்டைப் பிடிச்சுத் தப்பிச்சுட்டதா சொல்றீயே, யாரும் காப்பாத்த வரலையா?'
'இல்லை சார்... நிறையப்பேர் அந்த மண் திட்டுல நின்னு செல்ஃபி எடுத்துக்கிட்டு இருந்தாங்க!'
-எம். பி .தினேஷ், இடையர்பாளையம்.
'இவர் ரொம்ப காஸ்ட்லி சாமியார்னு ஏன் சொல்றே?'
'அருள்வாக்கு கேட்க தீவுக்கு வரச்சொல்றாரே!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'இந்த ஊருக்கு எப்பவோ வந்த மாதிரி இருக்கே?'
'மெதுவாப் பேசுங்க தலைவரே... இதுதான் நீங்க ஜெயிச்ச தொகுதி!'
'உன் அப்பா ஏன் ஒரு மூக்கில் மட்டும் பொடி போடுறார்?'
'டாக்டர்தான் மூக்குப்பொடியை பாதியாகக் குறைக்கச் சொல்லிட்டாரு !'
-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'வடை கறுப்பா இருக்கே?'
'அது அதிரசங்க!'
-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





