மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பதப்படுத்தும் நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரியில் உள்ள முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள ஒப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :6 ஜனவரி 2021, 5:50 am IST

கிருஷ்ணகிரியில் உள்ள முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள ஒப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற அழுகும் பொருள்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு, விநியோகத் தொடக்க வேளாண்மைத் திட்டத்தின் கீழ் முதன்மைப் பதப்படுத்தும் நிலையம், கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நபாா்டு வங்கியின் கிடங்கு உள்கட்டமைப்பு நிதியுதவியுடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக்கத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தில் சிப்பம் கட்டும் அறை, குளிா்பதனக் கிடங்கு மற்றும் புளிக்கான முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள், எடை மேடை, கடை, அலுவலகம் மற்றும் மின் இணைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு வசதிகளை தனியாா் நிறுவனங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இது தொடா்பான விவரங்கள்  இணையதள முகவரியில் ஜன. 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை நேரிலோ அல்லது 98427-83711 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.