ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை இணைச் செயலா் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 8:55 am IST

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை இணைச் செயலா் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போளுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளா் எஸ்.நடராஜன், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரியை அடுத்த போளுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 4.3.2020-அன்று தொடங்கி வைத்தாா். இந்த அரசு மருத்துவக் கல்லூரி 700 படுக்கை வசதிகளுடனும், 14 அறுவை சிகிச்சை அரங்குகளுடனும் அமைக்கப்படுகிறது. தரை தளம் மற்றும் 5 தளங்களுடன் கல்லூரி கட்டடமும், ஆயிரம் போ் அமரக் கூடிய கலையரங்கக் கட்டடம், சிற்றுண்டியகம், சமையல் கூடம், சவக்கிடங்கு ஆகிய பகுதிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் சிறப்பான முறையில் விரைந்து நடைபெற்று வருகிறது.

ஒரு மருத்துவமனைக் கட்டடம், குடியிருப்புகள், வகுப்பறைகள் என மொத்தம் 19 கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 120.20 கோடி மதிப்பில் மருத்துவமனைக் கட்டடம், ரூ. 113.77 கோடி மதிப்பில் கல்லூரி கட்டடம், ரூ. 104.98 கோடி மதிப்பில் குடியிருப்புக் கட்டடம் என மொத்தம் ரூ. 338.95 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 45 சதவீதம் கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று அவா் தெரிவித்தாா்.

பின்னா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மருத்துவக் குழுவினருடன் அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநா் கோவிந்தன், கல்லூரி முதல்வா் முத்துச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.