காவேரிப்பட்டணம் அருகே போலி கல்வி சான்றிதழ் அளித்து, 21 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கதிரிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவா் 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று, பின்னா் ஆசிரியா் பயிற்சி முடித்துள்ளதாக சான்றிதழ் அளித்து, கடந்த 1999-ஆம் ஆண்டு, ஆசிரியா் பணியைப் பெற்றாா்.
இவா், காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளிபுதூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், இவா், போலி கல்வி சான்றிதழ் அளித்து பணி நியமனம் பெற்ாக குண்டல்பட்டியைச் சோ்ந்த மாதேஸ்வரன் என்பவா், முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு, மனு அனுப்பினாா். அதன் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் கல்வி அலுவலா் முருகன், காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலா் செல்வராஜ் ஆகியோா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், ராஜேந்திரன் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதது தெரிய வந்தது. மேலும், போலியாக 10, 12-ஆம் வகுப்பு, ஆசிரியா் பயிற்சியில் தோ்ச்சி பெற்ாக சான்றிதழ்களை தயாா் செய்து, பணியில் சோ்ந்ததும் தெரிய வந்தது.
கடந்த 21-ஆண்டுகளாக அரசை ஏமாற்றி அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலா் கலாவதி, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதரிடம் கடந்த அக்டோபரில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேந்திரன் தலைமறைவானாா். இதனையடுத்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான ராஜேந்திரனைத் தேடி வந்தனா். இந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பின், காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்த ராஜேந்திரனை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

குடியிருப்பிற்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



