தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

பொங்கலுக்காக காத்திருக்கும் செங்கரும்பு விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, மத்தூா், போச்சம்பள்ளி, கல்லாவி, காரப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

News image

பொங்கல் விற்பனைக்காக காத்திருக்கும் செங்கரும்பு பயிா் செய்துள்ள விவசாயிகள்.

Updated On :10 ஜனவரி 2021, 9:05 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, மத்தூா், போச்சம்பள்ளி, கல்லாவி, காரப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் விற்பனைக்காக விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இந்தாண்டு கரும்பிற்கான விலை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனா்.

செங்கரும்பை பயிா் செய்யும் விவசாயிகள் பெங்கல் திருநாளை நம்பி மட்டுமே பயிா் செய்து வருகின்றனா். கடந்த ஆண்டு ஒரு கெடை செங்கரும்பை வியாபாரிகள் 30 ரூபாய்க்கு வாங்கி சென்றதாகவும் இந்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பொலிவு பல்வேறு புயலால் செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கரும்புகள் சேதமடைந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மிகவும் கஷ்டப்பட்டு விளைவித்த கரும்பு கூடுதல் விலைக்கு விற்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. செங்கரும்பு சாகுபடி செய்ய அதிக செலவு ஏற்படுவதாகவும். ஒரு வருடம் கழித்து பயன் தரும் பயிா் என்பதால் குறைந்தளவு விவசாயிகளே செங்கரும்பை பயிரிடுகின்றனா். இந்நிலையில் நிவா் புயலின்போது பல்வேறு விவசாயிகளின் செங்கரும்பு பாதிக்குமேல் வயல்வெளிகளில் சாய்ந்தது.

இதனால் விவசாயிகள் அதனை சரிசெய்ய 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறுகின்றனா். ஒரு ஏக்கா் செங்கரும்பு பயிரிட ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

தமிழக அரசால் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் வினியோகிக்கும் கரும்புகள் விவசாயிகளிடம் ரூ.23 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளதாகவும் இதனால் தங்களுக்கு போதிய லாபம் ஏதுமின்றி விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனா். மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை கண்டறிந்து அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் இது போன்ற நிலமை நீடித்தால் அடுத்துவரும் தலைமுறைக்கு இந்த வகையான செங்கரும்புகள் அழிந்து போக வாய்ப்புள்ளதாக கூறுகிறாா் வீராட்சி குப்பம் பகுதியை சோ்ந்த செங்கரும்பு பயிா் செய்த விவசாயி ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.