ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெல்லையில் மாணவர்கள் சாலைமறியல்

திருநெல்வேலி, டிச.6: திருநெல்வேலியில், நெல்லை- மதுரை சாலையில் பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் +1 வகுப்பு படித்தவர் பேட்டையைச் சேர்ந்த மைமூன் ஷர்மிளா ( வயது 17

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:56 pm

இன்பராஜ்

திருநெல்வேலி, டிச.6: திருநெல்வேலியில், நெல்லை- மதுரை சாலையில் பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் +1 வகுப்பு படித்தவர் பேட்டையைச் சேர்ந்த மைமூன் ஷர்மிளா ( வயது 17 ). நேற்று மாலை வீடு திரும்பியபோது, கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு வேகமாகச் சென்றது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிர் இழந்தார்.  

இதுகுறித்த புகார் போலீஸில் பதிவுசெய்யப்பட்டது. விபத்துக்குக் காரணமான வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். இருப்பினும் இது தொடர்பாக யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சக மாணவ மாணவிகள், உடனடி நடவடிக்கை கோரி இன்று காலையில் நெல்லை - மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முக்கியச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.