டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

போஃபர்ஸ் வழக்கை சிபிஐ மழுங்கச் செய்தது: அத்வானி

"போஃபர்ஸ் விவகாரத்தில் குவாத்ரோச்சி கமிஷன் தொகை பெற்றதை வருமான வரி தீர்ப்பாயம் கூட சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், போஃபர்ஸ் வழக்கை சிபிஐ மூலம்..."

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கெளஹாத்தி, ஜன.9- போஃபர்ஸ் வழக்கை சிபிஐ மழுங்கச் செய்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.

அசாம் மாநிலம் கெளஹாத்தியில் இன்று மாலை பாஜக கூட்டணி சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்வானி கூறியதாவது:

போஃபர்ஸ் ஊழல் காரணமாக சர்வதேச அளவில் நமது நாட்டின் புகழுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான குவாத்ரோச்சியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சோனியா வீட்டில் அவர் சாதாரணமாக வந்து செல்லும் நபராக இருந்துள்ளார்.

போஃபர்ஸ் விவகாரத்தில் குவாத்ரோச்சி கமிஷன் தொகை பெற்றதை வருமான வரி தீர்ப்பாயம் கூட சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், போஃபர்ஸ் வழக்கை சிபிஐ மூலம் மத்திய அரசு கமுக்கமாக மழுங்கச் செய்துவிட்டது. இது மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ளது.

இந்த ஊழலால் நமது நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, போஃபர்ஸ் விவகாரம் தற்போது கையாளப்படும் விதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அத்வானி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.