குன்னூர், நவ.9: குன்னூர் ராணுவ குடியிருப்புப் பகுதிகளில் 2 தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் பரவியதை அடுத்து ராணுவ வீரர்கள், குன்னூர் காவல் துறையினர், அதிரடிபடை வீரர்கள் என்று அனைவரும் ஒன்றுசேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக குன்னூரில் பரபரப்பு நிலவியது.
குன்னூரில் புதன்கிழமை 2 தீவிரவாதிகள் ராணுவ குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவியதாக செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து குர்கா ஹில் பகுதியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள்,குன்னூர் காவல் துறையினர், அதிரடிப்படை வீரர்கள், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுப்பட்டனர், இதனைத் தொடர்ந்து குன்னூர் டி.டி.கே சாலை, மனெக்சா பாலம், பேரக்ஸ் செல்லும் சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் ராணுவம் மற்றும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன,
இதனைத் தொடர்ந்து இப் பகுதிகளுக்குள் செல்வதற்கு பொதுமக்கள், வாகனங்கள், உள்ளிட்டவை அனைத்தும் தடைசெய்யப்பட்டன. இதன் காரணமாக மூன்று மணி நேரம் இப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் இது ஒத்திகை நிகழ்ச்சி என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் மத்திய அமைச்சா் மொஹ்சினா கித்வாய் காலமானாா்
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
ஈரானைவிட்டு இந்தியா்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

