ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் நடிகர் மர்ம மரணம்

குன்னூர், அக்.31: மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் நடிகர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டதாக போலீஸார் கூறினர். குன்னூர் பகுதி கொடலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேலன். இவர் படுகர் இனத்தைச் ச

Updated On :20 செப்டம்பர் 2012, 12:09 am

குன்னூர், அக்.31: மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் நடிகர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டதாக போலீஸார் கூறினர்.

குன்னூர் பகுதி கொடலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேலன். இவர் படுகர் இனத்தைச் சேர்ந்தவர். கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஓரளவு அறிமுகம் ஆனவர். பார்த்திபன், சாமி உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் வெற்றிவேலன். வயது 38. இவரது மனைவி லதா. மனைவியை விட்டு வெற்றிவேலன் கடந்த ஒன்றரை வருடங்களாக பிரிந்து வாழ்ந்தாராம்.

இந்நிலையில் குன்னூர் அருகே தூதுர்மட்டம் பகுதியில் ஒரு கழிவுநீர்க் கால்வாய் அருகில் அவர் உடல் கிடந்ததாக இன்று காலை போலீஸாரால் கண்டறியப்பட்டது. தீபாவளிக்கு முன் தினம் மாலை 7 மணி வரை அந்தப் பகுதியில் அவர் நடமாடியதைப் பார்த்ததாக உள்ளூர் மக்கள் கூறினர். குடிபோதையில் இருந்ததாகவும், அளவுக்கு மீறிக் குடித்திருந்தார் என்றும் அவர்கள் கூறினர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அங்கே சுற்றித் திரிந்ததாகவும் அவர்கள் கூறினர். இவர் இறந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்று அவரது உடல் போலீஸாரால் மீட்கப்பட்டு குன்னூர் மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.

இதன் பிறகே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தகவல் தெரியவரும் என்றனர் போலீஸார்.

வெற்றிவேலன், ஹொசமுங்காரு என்னும் படத்தை இயக்கி வந்தாராம்.

”ஹொச முங்காரு” - என்றால் படுகர் மொழியில் ”புதுவசந்தம்” என்று பொருள். கோவை, திருப்பூர், பெங்களூர் பகுதிகளில் படுக இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். “ஹோச முங்காரு” என்ற பெயரிலேயே படுகர் மொழியில் திரைப்படம் தயாராகி வந்தது. தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் இப்படத்தை தயாரித்து வந்தனர். இந்தப்படத்தின் இயக்குநராக வெற்றிவேலன் பணிசெய்தார். நீண்ட நாட்கள் இந்தப் படம் தயாரிப்பிலேயே இருந்து வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.