தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அரசு பஸ் கவிழ்ந்தது; 72 பேர் காயமின்றி தப்பினர்

கும்மிடிப்பூண்டி,செப்.10: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் சாலையோரம் பஸ் கவிழ்ந்ததில் பஸ்ஸில் பயணம் செய்த 72 பேரும் காயமின்றி தப்பினர். சென்னை செங்க

Updated On :20 செப்டம்பர் 2012, 12:19 am

கும்மிடிப்பூண்டி,செப்.10: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் சாலையோரம் பஸ் கவிழ்ந்ததில் பஸ்ஸில் பயணம் செய்த 72 பேரும் காயமின்றி தப்பினர்.

சென்னை செங்குன்றத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 113ஏ என்ற பேருந்து கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்ஸில் ஓட்டுனர் அல்லிமுத்து(36) மற்றும் நடத்துனர் துளசிராமன்(34) ஆகியோர் பணியில் இருந்தனர்.

இந்தப் பேருந்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் பல்வேறு பகுதிகளில் வேலையை முடித்து தேர்வாய் பகுதிக்கு சென்று கொண்டிருந்த 42 பயணிகள், 30 பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 72 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

பூவலம்பேடு அடுத்து இந்த பஸ் தேர்வாய்க்குச் செல்ல சாலையில் சென்றபோது பஸ்ஸின் பிரேக் அச்சு எதிர்பாராதவிதமாக முறிந்தது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

பஸ் மெதுவாகச் சென்று கொண்டிருந்ததாலும், சாலையோரம் பள்ளம் ஏதும் இல்லாமல் இருந்ததாலும் பஸ் கவிழ்ந்த நிலையிலும் பஸ்ஸில் பயணம் செய்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

பஸ் கவிழ்ந்ததை அறிந்து தேர்வாய் பகுதியினர் பஸ்ஸுக்குள் சிக்கியவர்களை வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலையோரம் கவிழ்ந்த பஸ்ஸை தூக்கி நிறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.