திருத்துறைப்பூண்டி அருகே துப்பாக்கிச் சூடு
திருத்துறைப் பூண்டி ஆக., 2 : திருத்துறைப் பூண்டி அருகே உள்ள கீழப்பாண்டி என்ற இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து லாரி ஒன்று வெளியில் வந்தது.


திருத்துறைப் பூண்டி ஆக., 2 : திருத்துறைப் பூண்டி அருகே உள்ள கீழப்பாண்டி என்ற இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு உள்ளது.
இந்த கிடங்கில் இருந்து லாரி ஒன்று வெளியில் வந்தது. அப்போது சென்னையில் இருந்து கன்னியாக்குமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேடடையில் இருநது திருத்துறைப் பூண்டிக்கு சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்தது. லாரி திடீரென கிடங்கில் இருந்து வெளியே வந்ததை கவனித்த காரின் ஓட்டுநர் காரை வளைத்து ஓட்டு விபத்தில் இருந்து தப்பினார்.
இந்த சம்பவத்தில் காரில் வந்த பேட்டையைச் சேர்ந்த கௌதமனுக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர். இந்நிலையில், கௌதமன் தன் கைவசம் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...