கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிக்னல் கோளாறினால் தாமதமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

சிதம்பரம் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறினால் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. 

News image
Updated On :10 டிசம்பர் 2012, 1:18 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறினால் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. 

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் (16854) ரயில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சிதம்பரம் ரயில்நிலையம் அருகே வந்தது. அப்போது சிக்னல் கோளாறினாலும், பாயிண்ட் வேலை செய்யாததாலும் ரயில்நிலையத்திற்கும் வெளியில் பாதையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அப்பாதையிலிருந்து உசூப்பூர் ரயில்வே கேட் மூடப்பட்டதால் அப்பகுதியில் சுமார் 50 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது.

அதேபோன்று சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (16853) சிதம்பரம் ரயி்ல் நிலையத்திற்கு பிற்பகல் 1.05 மணிக்கு வந்தது. சிக்னால் கோளாறினால் ரயில்நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு திருச்சி-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 1.50 மணிக்கு சிதமபரம் ரயில் நிலையத்திற்கு வந்து புறப்பட்டு சென்றது. சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை-திருச்சி செல்லும் மற்றொரு ரயிலான சோழன் எக்ஸ்பிரஸ் 1.55 மணிக்கு புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.