சாத்தூர் படந்தாள் சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுவதைக் கண்டித்து நேற்று நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களில் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் படந்தாள் சந்திப்பில் திருநெல்வேலி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி சாலையைக் கடப்பதற்காக நின்றிருந்த முருகன் என்பவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறி இதனை தடுக்க நான்கு வழிச் சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அவ்வூர் பொதுமுக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு 11 மணிக்கு துவங்கிய சாலை மறியல் போராட்டத்துக்குப் பிறகு சிவகாசி கோட்டாட்சியர் ரங்கன், சாத்தூர் தாசில்தார் மைக்கேல் ராஜ், டிஎஸ்பி சின்னையா ஆகியோர் பொதுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியலின் போது 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
அப்போது, பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அதிகாரிகளை தாக்க முயன்ற போது போலிசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடியில் சாத்தூரைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், மறியலில் ஈடுபட்டவர்கள் 16 பேர் மீது இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர் போலிஸார். மேலும் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாலை மறியல் காரணமாக நேற்று இரவு சாத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. விருதுநகர் எஸ்பி மகேஷ்வரன் மறியல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு போலிஸாரிடம் விசாரணை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

