உலக நன்மை வேண்டி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள திருவாவடுதுறை மடத்தின் புதிய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரியார் அனைத்து கோயில்களிலும் சென்று வழிபட ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிதம்பரம் ஸ்ரீமெய்கண்டநாதர் கோயிலுக்கு அம்பலவாண தேசிக பராமாச்சாரியார் சுவாமிகள் வியாழக்கிழமை வருகை தந்தார். அவரை இந்து ஆலய பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில் செந்தில்குமார், ஜோதி குருவாயூரப்பன், இந்து முன்னணி நிர்வாகிகள் குருமூர்த்தி, பாண்டியன், முரளீதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்றார்.