கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை: சிதம்பரம் அருகே எம்.எல்.ஏ தலைமையில் சாலைமறியல்

சிதம்பரம் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற கொள்ளிடக் கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :21 டிசம்பர் 2012, 8:42 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள கொள்ளிடக்கரை சாலையை சீரமைக்க கோரி கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் சாலைமறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடியம்பாளையம் முதல் அணைக்கரை வரை கொள்ளிடம் வலது கரையை பலப்படுத்தி சாலை அமைக்கப்பட்டுள்ளது. அச்சாலை குறுகலாக அமைக்கப்பட்டதால் போக்குவரத்திற்கு லாயக்கற்று நிலையில் உள்ள கொள்ளிட்டகரை சாலையை அகலப்படுத்தி பேருந்து போக்குவரத்தை உடன் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை என வலியுறுத்தி இச்சாலைமறியல் நடைபெற்றது.

சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் சீர்காழி செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆறு.கலையரசன் (வல்லம்படுகை), எஸ்.சந்தானகுமார் (கீழகுண்டலபாடி), தவமணிராமசாமி (பெராம்பட்டு), கே.கெளதமன் (சாலியாந்தோப்பு), பி.முத்துலட்சுமி (கருப்பூர்), கே.கலியமூர்த்தி (வையூர்),  பி.மாசிலாமணி (அகரநல்லூர்), ஒன்றியக்கவுன்சிலர்கள் டி.சங்கர், ஏ.டிசெந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி குமராட்சி ஒன்றியச் செயலாளர் மாசிலாமணி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300 பேர் மறியலில் பங்கேற்றனர்.

சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.தனசிங், ஏஎஸ்பி எம்.துரை மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சமரசப்படுத்தியதால் மறியல் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சிதம்பரம்-சீர்காழி நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பினனர் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேசசுவார்த்தையில் சாலையை அகலப்படுத்தி பேருந்துகள் இயக்க பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்வது என்றும், வருகிற  டிச.25-ம் தேதி சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.