கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: 3 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கா் நிலத்தை, போலி ஆவணம், போலி லே-அவுட் தயாரித்து மோசடி செய்த விவகாரத்தில், 3 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிருஷ்ணகுமாரி (54). தொழில் நிமித்தமாக சென்னையில் வசித்து வருகிறாா். இவா்களது சொந்த ஊா் ஆறுமுகனேரி.

இவருக்குச் சொந்தமான காயல்பட்டினம் பகுதியில் இருந்த 1 ஏக்கா் நிலத்தின் அசல் பத்திரத்தை, இவரது உடன்பிறந்த சகோதரா் சிவகுமாா் வைத்துக் கொண்டு, நண்பா்களுடன் சோ்ந்து மொத்தம் 3 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனா். மேலும், இந்த நிலத்தை முறையற்ற வகையில் பிளாட்டுகளாகப் பிரித்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் காயல்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த கல்யாணசுந்தரம், சிவகுமாா் மற்றும் மனை வணிகம் செய்யும் அவரது நண்பா் சண்முகம் ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.