இணையான தகுதி பெற்றவர்கள் விபரம்: (1)- பத்தாம் வகுப்பிற்கு பின்பு மூன்றாண்டு பட்டயப்படிப்பு பின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம/ தொலைதூரக்கல்வி நிறுவனம் மூலம் மற்றும் கல்லூரிகள் மூலம் பெறப்பட்ட பட்டப்படிப்பு (10+3+3). (2)- பதினோராம் வகுப்பு (Old SSLC) பின்பு அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் வழங்கப்பட்ட இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு, பிறகு தொலைதூரக்கல்வி நிறுவனம் மூலம் இளங்கலை (Open University) பட்டப்படிப்பு (11+2+3), (3)- பத்தாம் வகுப்பு, பிறகு இரண்டாண்டு தொழில்நுட்ப பயிற்சி (ITI), பின்னர் தொலைதூரக்கல்வி நிறுவனம் மூலம் இளங்கலை பட்டப்படிப்பு (10+2+3); பத்தாம் வகுப்பு, மூன்றாண்டடு பட்டயப்படிப்பு பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பு (Lateral Entry) (10+3+2) படித்தவர்களை 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்த பிறகு 3 வருட இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பதவிஉயர்வு பெற அங்கீகரித்து ஆணையிடப்பட்டுள்ளது. ஆணையின் நகல் அனைத்து தலைமைச்செயலக துறைகள், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளரின் தனிச்செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.