சிதம்பரத்தில் இளம்பெண் கடத்தல்: தாயார் போலீஸில் புகார்
சிதம்பரத்தில் இளம்பெண் கடத்தப்பட்டதாக அவரது தாயார் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.


சிதம்பரத்தில் இளம்பெண் கடத்தப்பட்டதாக அவரது தாயார் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
விருத்தாசலம் தாலுக்கா விளக்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தீபா (17). ஆசிரிய பட்டய படிப்பு படித்தும் வரும் இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளவரசன் (21) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த பெற்றோர் தீபாவை சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவக்குளத்தில் உள்ள பெரிய தந்தை பாலகிருஷ்ணன் வீட்டில் கொண்டு சென்று தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் பெரியதந்தை வீட்டிலிருந்த தீபா வியாழக்கிழமை காணாமல் போனார். தனது மகளை இளவரசன் கடத்தி சென்று விட்டதாக அவரது தாயார் அமுதா அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...