சிதம்பரத்தில் மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம்: விடுதலைச் சிறுத்தைகள் சாலைமறியல்
சிதம்பரம் நகரில் தனியார் ஸ்டுடியோவில் பணியாற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை


சிதம்பரம் நகரில் தனியார் ஸ்டுடியோவில் பணியாற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை மதியம் 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்து தலையில் படுகாயமுற்றார். பின்னர் கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
சிதம்பரத்தை அடுத்த சம்பந்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சந்தியா (21). இவர் சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள தனியார் போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஸ்டுடியோ உள்ள 3-வது மாடியிலிருந்து சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சந்தியா இறந்தார்.
சாலைமறியல்:
சந்தியாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மேலவீதியில் உள்ள ஸடுடியோ முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் நிர்வாகிகள் ரா.காவியச்செல்வன், பால.அறவாழி, குறிஞ்சிவளவன், தமிழ்வளவன், இளவழகன், அதியமான, செல்வமணி, பாவாணன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு பின்னர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப்படுத்தியதால் மறியல் வாபஸ் பெறப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இளம்பெண் சந்தியா மரணம் குறித்து நகர போலீஸார் சந்தேகமரணம் என வழக்குப் பதிந்து ஸடுடியோ உரிமையாளர் விஜயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...