வீராணத்திலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடும் வரை தொடர் உண்ணாவிரதம்: எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன்
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடக்கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்


கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடக்கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வீராணம்ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் 1லட்சத்து 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன. இந்நிலையில் பயிரினை காப்பாற்ற வீராணம்ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் பஸ் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து மறியல் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை ஏரியிலிருந்து நீர் திறந்து விடப்படாததால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.மாதவன், மாவட்டச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாதர்சங்கம் ஞானமணி, அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வீராணத்திலிருந்து நீரை திறந்துவிடும் வரை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...