சிதம்பரத்தில் குஜராத் இளைஞர் கொலை!
சிதம்பரம் நகரில் கூலித்தொழிலாளியான குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் சகதொழிலாளியால் புதன்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டார்.


சிதம்பரம் நகரில் கூலித்தொழிலாளியான குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் சகதொழிலாளியால் புதன்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டார்.
சிதம்பரம் நகரில் போர்வெல் போடுவதற்காக கனகசபைநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு குஜராத் மாநிலம் கசாலா மாவட்டம் சித்திக் பகுதியைச் சேர்ந்த நித்திம்பாய் (27) தலையில் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த நகர போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு கொலை தொடர்பாக சகதொழிலாளியான குஜராஜ் மாநிலம் எட்டி தாலுக்கா கட்டம்பா பகுதியைச் சேர்ந்த சோமளாபாய் (35) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுத்தியையும் பறிமுதல் செய்தனர். இறந்த போன நித்திம்பாயிற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...