தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மானாமதுரை அருகே பஸ் மோதி பைக்கில் சென்ற கணவன், மனைவி சாவு

மானாமதுரை, ஜூலை 6 : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே  அரசு பஸ் மோதி பைக்கில் வந்த கணவன், மனைவி இறந்தனர். மதுரை கூடல்நகர் புதூரைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி சகாயஅருள் (40). இவரது மனைவி சகாய லூர்து ஜெயபீவ

Updated On :19 செப்டம்பர் 2012, 5:11 pm

மானாமதுரை, ஜூலை 6 : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே  அரசு பஸ் மோதி பைக்கில் வந்த கணவன், மனைவி இறந்தனர். மதுரை கூடல்நகர் புதூரைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி சகாயஅருள் (40). இவரது மனைவி சகாய லூர்து ஜெயபீவி(36) இருவரும் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் சிறப்பு திருப்பலி பூஜையில் கலந்து கொள்வதற்காக பைக்கில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். செம்பராயனேந்தல் என்ற இடத்தில் வந்தபோது ராமேஸ்வரத்திலிருந்து பெங்களூர் சென்ற அரசு விரைவு பஸ் இந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் வேளாங்கண்ணி சகாய அருள், மனைவி சகாய லூர்து ஜெயபீவி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாசேத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேற்கண்ட இருவரது உடல்களும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.